பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறையில் என் மணி விழா 莎59 தழைப்பவரு சமயவேற் றுமைக்கா ணாதான்: தண்டமிழும் ஆங்கிலமும் தேர்ந்த ஞானி; மழைப்பருவம் கண்டமயில் இனம்போல் அன்பர் மகிழவரு சுப்புரெட்டி என்பான் மன்னோ . இலக்கியமா? இலக்கணமா? இயல்விஞ்ஞான எழிற் கலையா? உளநூலா? எதிலும் வல்லான். கலக்கமிலா தாராய்ச்சி முடிவு காட்டிக் களிப்புறுவோன்; அறிஞரெலாம் கருத வாழ்வோன்; புலக்கண் உற உரைகாண்பான்; நூலும் காண்டான் போதகா சிரியனுமாய்ப் போந்தான் கண்டீர்; தலக்கணிவன் தனக்கு நிகர் தானாய் நின்ற சான்றோன்காண் சுப்புரெட்டி என்பான் மன்னோ. அறிவுடைநூல் பல தமிழில் தந்த நந்தம் அறிஞர்பிரான் சுப்புரெட்டி யாரென்றுற்றோன்; இறையருளால் அறுபதாண் டெய்தி நின்ற இவன்திருவேங் கடத்தெந்தை யருளால் இன்னம் துறைபலவா விரிந்த பன்னுால் தோய்ந்து தோய்ந்து சொல்லமுதம் நமக்களிக்க சிறுவர் தம்மோ டுறவினரும் அயலவரும் போற்ற வாழ்க உறற்கரிய வளம்பலவும் உறுக மாதோ. புலவர் த. பெரியாண்டவன் எம். ஏ., (மொழி பெயர்ப் புத்துறை தனி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்கம், சென்னை-6001.08) வாழ்த்தியது (10 பாடல்களில் 8 பாடல்கள்): சொல்லிலே இனிமை! தூய நெஞ்சிலே தமிழ்உ ணர்ச்சி அல்லுநன் பகலும் நல்ல ஆய்வுகள் செய்த வண்ணம் 6. மணிவிழா மலர்-பக் 24-25