பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/596

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 நினைவுக் குமிழிகள்-4 செந்தமிழ்த் தொண்டர் சுப்பு ரெட்டியின் பணிசி றக்க வந்து பல் லாண்டு தந்து வாழ்த்துக! வாழ்க! வாழ்க!" டாக்டர் பு. மு. சாந்தமூர்த்தி, (தமிழ்ப் பேராசிரியர் துறைத்தலைவர் செளராட்டிரக் கல்லூரி, மதுரை, (என் ஆய்வு மாணவர்) வாழ்த்து: வேங்கடவன் திருவருளால் வினைகள் வென்று வீறு தமிழ் நூலார்ந்த வெற்றிச் செல்வர் ஒங்கு புகழ் தமிழாய்வில் உயர்ந்த செம்மல் உள்ளத்தின் நற்பண்பை உயர்த்தும் ஆசான் பாங்கறிந்து செயலாற்றிப் பழகும் நெஞ்சர் பல்லாண்டு வாழ்க எனப் பாடும் பாட்டில் தாங்குமுளம் தாம்பெற்ற தமிழர் வாழ்க தமிழ்சுப்பு ரெட்டியார்தம் தொண்டு வாழ்க! தொண்டுள்ளம் மறவாமல் துங்கும் பாதை தூயமனச் செம்மலெனத் தோன்றும் வாழ்க்கை கண்டுயர்ந்த ஆராய்ச்சிக் களத்தின் வேந்தர் கணித்தமிழின் சாறளிக்கும் குறிஞ்சிக் கோமான் பண்பிற்கோர் காட்டாகப் பழகும் பண்பர் பயன்கூறி ஊக்குவிக்கும் ஆய்வுக் கண்ணர் தண்டமிழின் இனிமையெனத் தழைத்து வாழ்க! தனிப்பார்வைப் பேராசான் நெஞ்சம் வாழ்க! நீக்கமற நிறைகின்ற இறையைக் காட்டும் நிலையுயர்ந்த வாழ்வுரைக்கும் எங்கள் ஆசான் நோக்கத்தால் இமயமலை வடிவம் காண்பார் நுண்ணறிவால் காவிரியின் வளமை காண்பார் 7. மணிவிழாமலர்-பக் 29.