பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறையில் என் மணி விழா 563 ஆக்கத்தால் பாரதியின் வண்ணம் காண்பார் அன்புரையால் திரு. வி. க. அகமே காண்பார் காக்கின்ற இறையருளில் முன்னோர் காண்பார் கனிந்தசுப்பு ரெட்டியார்தாம் இவையாய் வாழ்க! கொஞ்சு:தமிழ்ப் பேராசான் வாழ்க்கைச் செம்மை கூறுகின்ற வாழ்வொன்றே கல்வி என்போம்: நெஞ்சுவளர் அறிவாற்றல் நீர்மைச் செம்மை நேரிருக்கும் வழியொன்றே கடமை என்போம்: விஞ்சுபுகழ் வேங்கடவன் விருப்பில் வாழும் வெற்றி நல வினையொன்றே உரிமை என்போம்: தஞ்சமென வேங்கடவன் திருத்தாள் சார்ந்து தாமுரைக்கும் மொழியொன்றே பாடம் என்போம். சொல்லார்ந்த நாவன்மைச் செம்மை தந்து சுவையார்ந்த அறிவியலின் வளங்கள் தந்து நல்லாரின் நடுவினிலே உயர்ந்த நல்லார் நாடுகின்ற ஏற்றத்தில் நன்மை தந்து வில்லார்ந்த வேங்கடவன் மொழிகள் தந்து விருப்பத்தில் தமிழ்க்காதல் இறைமை தந்தார் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தும் போதில் பரமனவன் திருவருளே வாழ்த்து மன்றோ இனித்தமுகம் எழுந்துவரும் அன்புப் பார்வை இறையோர்க்குத் துணையாக இசைந்த மாட்சி பனித்தமலர் மென்மைக்குள் தோய்ந்த காட்சி பரம்பொருளின் நலமாய்ந்த ஆழ்வார் பாடல் கனிந்தவளம் பாராட்டும் கடமைச் சொற்கள் கவிதைவளம் துய்க்கின்ற காதல் மேன்மை தனித்தமொழிச் சீராளர் போற்றும் மும்மைத் தமிழ்சுப்பு ரெட்டியார்தம் அன்பு வாழ்க!