பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 நினைவுக் குமிழிகள் .கி. அணிசிறக்கும் வேங்கடத்தான் அருளின் பார்வை அழகெல்லாம் பருகுகுன்ற தமிழின் ஆசான் மணித்தமிழின் சாலையிலே புதுமை செய்தார் மானுடத்தின் வெற்றிகூறும் அறிவுச் செல்வம் தணியாத அன்பாலே தழைக்கச் செய்தார் தாமுணர்ந்த அறிவியலைத் தமிழுக் கீந்தார் மணிவிழாவின் திருநாளில் யாவும் வாழ்த்தும் மங்கலங்கள் என்றென்றும் வளர்க, வாழ்க! விழிச்சிறப்பே! மணிவிழா வைக்காணும் ஆசான் விருப்பங்கள் வெல்கவெனப் பார்வை காண்க! மொழிக்களமே! எம்மாசான் கல்வி நெஞ்சில் முகிழ்த்தவைதாம் கேட்கவென ஒலிக்கக் காண்க! வழித்துணையே! சீராளர் கண்ட பாதை வகுத்தவெலாம் வளர்கவெனப் பயணம் காண்க! எழிற்குலமே! நம்சுப்பு ரெட்டி யாரின் இனியவாழ்வு வாழ்கவென எழுதக் காண்க! இந்தப்பாடல்களில் எல்லாம் என் தமிழ்த்தொண்டு, நற்குணங்கள், உயர்பண்புகள் காட்டப் பெற்றுள்ளன. உயர்வு நவிற்சிக்கு இடமே இல்லை; சாதிவெறி சமயவெறி இல்லாமை காட்டியது சத்தியமாகவே உள்ளது. என் அரு ை நண்பர் சிந்தனைச் செம்மல் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி என்பால் கண்டவை: "...கைச்சுவை அறியாத நகைச்சுவைப் பண்பாளராகிய அப்பெருமானால் போதிக்க வேதிக்க சாதிக்க முடியாதது ஒன்று உண்டோ! அவரிடம் இல்லாத செல்வம் இல்லை. அறிவுச் செல்வம், உழைப்புச் செல்வம் அருட்செல்வம் எல்லாம் அவரிடம் அள்ள அள்ளக் குறையாமல் உண்டு. சிக்கனச் செல்வமும் சீராக உண்டு! (மதிப்பெண்கள் தருவதில் மட்டும் இந்தச் சிக்கனம் இம்மியும் இராது:).நன்றி உணர்வு நிறைந்தவர்; நடுநிலை பிறழாதவர். பிறழ்ந்தாலும்கனவாலும் பிறர்க்குத் .ே மணிவிழா மலர்-71.7: