பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறையில் என் மணி விழா 蔷65 தீமை புரியாத கருணைக் கடல் . திரு வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையை அவர் உருவாக்கி யிருக்கும்-திருவாக்கியிருக்கும்-உரன் திறன் வியத்து வியந்து மகிழ்ந்து மகிழ்ந்து போற்றுதற்குரியது... பேராசிரியரின் மனைவியும் மக்களும் அவர் மனத்திற்கு ஏற்ற மாண்பினர்...எவர்க்கும் இனியராய், உழைப்பின் உருவமாய், விளங்கும் பேராசிரியர் ரெட்டியார் விரும்பும் காலமெல்லாம் வாழ்ந்து வேண்டும் பணிகளெல்லாம் புரிய மாமனாரும் மருமகளும் ஒருங்கிணைத்து திருவருள் புரிவார்களாக" நானும் அறுபது வயதில் என்னைத் தற்சோதனைக்கு (Self Examination) உட்படுத்தி உள்நோக்கும்போது நான் கண்டவையே பிறர் கண்டவையாக இருப்பதைக் காணும் போது என் உள்ளம் களிப்பெய்துகின்றது. இவ்வாறு என்னை நல்வழியில் நடத்திய எம்பெருமானின் கருணை வெள்ளத்தைப் போற்றுகின்றேன். மணிவிழாவில் ஆங்கிலத்தில் வந்த ஆசிச்செய்திகளும் என்னைப் புறவயமாகவே (Objective) காட்டுகின்றன. . مس--سس--سسسسسسسسسسسسسسس-- 9. மணிவிழா மலர்-பக் 32-63