பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/600

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-226 70. பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு பின்குடும்பம் காரைக்குடியிலிருந்த போது 1965செப்டம்பர் விடுமுறைக்குக் காரைக்குடி வந்திருத்தேன். அப்போது ஆலத்துடையாம்பாடி என் அண்ணன் திரு. மு. கிருஷ்ணசாமிரெட்டியார்(என் மனைவியின் அத்தைமகன்) நெஞ்சில் சளி அடைத்துக் கொண்டதை நிவர்த்தி செய்யும் பொருட்டுக் காரைக்குடி வந்து 15 நாள் தங்கியிருந்தார். டாக்டர் P.K. நாராயண அய்யரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். இந்த விடுமுறையின்போது பாண்டி நாட்டிலுள்ள சில வைணவத் திருப்பதிகளைச் சேவிக்க நினைத்தேன். ஒருநாள் திரு. மெய்யத்தையும் மற்றொரு நாள் திருக்கோட்டியூரையும் சேவித்தேன் என் இளைய மகன் இராமகிருஷ்ணனுடன். அப்போது அவன் மூன்றாம். படிவத்தில் படித்துக் கொண்டிருந்தான். பிறிதொருநாள் திருப்புல்லாணியைச் சேவித்தேன். அங்கிருந்து இராமநாதபுரம் வந்து இராமநாதபுரம் மன்னர் அரண்மனை, தாயுமானவர் சமாதி முதலிய வற்றைப் பார்த்தோம். பின்னர் இராமேசுவரம் சென்று அங்குள்ள கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். கந்தமாதன பர்வதம், பல்வேறு தீர்த்தங்கள், அக்கினி தீர்த்தம் முதலிய வற்றைச் சிறுவனுக் காட்டினேன்.அப்பொழுது காரைக்குடி பயிற்சிக் கல்லூரி குடிமைப் பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முகாமின் உணவு வசதிகள் எங்கட்கும் கிடைத்தன. ஒருநாள் பிற்பகல் பயிற்சிக் கல்லூரி மாணவர்கட்கு ஒரு மணி நேரம் பேசினேன். மறுநாள் பயிற்சி முடிந்து மாணவர்கள் ஊருக்குத் திரும்பினர் பகல் 12-மணிக்குக் கிளம்பும் இராமேஸ்வரம் விரைவு வண்டியில்.