பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிதாட்டுத் திருத்தல வழிபாடு ፬6? நாங்களும் அதே வண்டியில் திரும்பினோம். இங்ங்ணம் காரைக்குடியைச் சுற்றியிருக்கும் மூன்று தலங்கள் சேவையாயின. பிறிதொருநாள் மதுரைக்குச் சென்று மங்கம்மாள் சத்திரத்தில் தங்கிக்கொண்டு அழகர் கோவில் (திருமாலிருஞ்சோலைமலை) சென்று சுந்தரராசனையும் திரும்பிவரும்போது திருமோகூர் காளமேகத்தையும் சேவித் தோம். அன்று மாலையில் கடலழகரைச் சேவித்து அவரது ஆசிபெற்றோம். அடுத்த நாள் சிரீவல்லிப்புத்துார் சென்று அரங்க மன்னாரையும் (ஆலிலைப் பள்ளியான்) அன்னை ஆண்டாளையும் சேவித்தோம்; அங்கிருந்து திருத்தண் காலைச் சேவித்துக் கொண்டுவிருது நகர் வழியாக மதுரைக் குத் திரும்பினோம். இரவு ஓய்வு. அடுத்த நாள் திருப்பரங் குன்றம் சென்று வந்தோம். மாலையில் மீனாட்சியம்மன் கோயில், புது மண்டபம், மகால் முதலியவற்றைப் பார்த் தோம். இந்தச்சுற்றுலா பையனுக்கு மிகவும் பயன்பட்டதாக அமைந்தது . இத்தனை இடங்களைப் பார்பது உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு ஒரு சிறந்த அநுபவத் தானே. அங்கிருந்து அன்றிரவு திருச்சி சென்று மாயவரம் விடுதியில் தங்கி சோழநாட்டுத் திருத்தலங்களில் ஆறினைச் சேவித்துக் கொண்டு காரைக்குடி திரும்பி னோம். இது பாண்டிநாட்டுத் திருத்தலப் பயணத்தில் முதல் சுற்று. இரண்டாவது சுற்றுப் பயணம் 1969 ஜூன் திங்கள் தொடங்கியது. திருப்பதியிலிருந்து புறப்பட்டுக் காரைக் குடிக்கு வந்தோம், இந்தப் பயணத்தில் நான்,என் மனைவி, என் மக்கள் இராமலிங்கம் இராமகிருஷ்ணன் ஆகிய நால்வரும் கலந்து கொண்டோம். காரைக்குடியில் புதிதாக வாங்கப் பெற்ற வீட்டைத் திறந்து பார்த்து விட்டு ஒருநாள் தங்கினோம். அடுத்த நாள் தேவக் கோட்டை ரஸ்தாவில் இராமேசுவரம் விரைவு வண்டி ஏறி