பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56ぎ நினைவுக் குமிழிகள்-4 இராமேசுரவம் வந்து கண்டனுாரார் விடுதியில் தங்கி னோம். அந்த விடுதியின் பொறுப்பாளர் முன்னமே அறிமுகமானவராதலால் அங்குத் தங்குவதில் சிரமம் ஏற்படவில்லை. 1968-இல் காசி சென்றபோது எடுத்து வந்த தீர்த்தத்தைக் கையில் கொண்டு வந்திருந்தோம். அது பித்தளைச் செம்பில் அடைக்கப் பெற்றிருந்தது. தாமிரச் செம்புடன் தீர்த்தத்தைத் தந்தால் சிறப்பு என்று அர்ச்சகர் சொன்னதால் ரூ91-க்கு ஒரு தாமிரப் பாத்திரம் வாங்கித் தீர்த்தத்தை அதில் ஊற்றித் தந்தோம். இராமலிங்கத்திற்கு (இறைவன்)இத்தீர்த்தத்தைக்கொண்டு அபிஷேகம் செய்யப் பெற்றது. அக்கினி தீர்த்தத்தில் நீராடித் திருக்கோயிலுள் உள்ள தீர்த்தத்தில் நீராடிய பிறகுதான் அபிஷேகம் செய்யப் பெற்றது. பின்னர் கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். முதல் நாள் மாலையே கந்தமாதன டர்வ தம், வழியிலுள்ள பல தீர்த்தங்கள் இவற்றைச் சுற்றிப் பார்த்து விட்டோம். பிற்பகல் கோவை விரைவு வண்டியில் ஏறி மதுரை வந்து இரண்டாவது சுற்றாக சிரீவில்லிப்புத்தூர், திருத் தண்கால், அழகர் கோயில், கூடலழகர், திருமோகூர் ஆகிய தலங்களைச் சேவித்தோம். இவ்வாறு ஐந்து திருத்தலங் களின் சேவை முடிந்தது, அடுத்து மங்கம்மாள் சத்திர அறையைக் காலிச் செய்து விட்டு திருநெல்வேலி சென் றோம். இருப்பூர்தி சந்திப்புக்கருகிலுள்ள ஒரு விடுதியில் (ஒர் இஸ்லாம் அன்பருக்குச் சொந்தமானது) தங்கிக் கொண்டோம். ஏற்கெனவே நவதிருப்பதிகளையும பார்ப் பதற்கு எஸ். ஆர். சுப்பிரமணியப் பிள்ளையவர்களின் கார் அல்லது சிற்றுந்து (Van) தந்து உதவுமாறு எழுதியிருந் தேன். திருநெல்வேலி வந்ததும் அவர்கள் புத்தகக் கடை சென்று இந்த வேண்டுகோளைத் தெரிவித்தேன். நெல்லை யில் சாலைக் குமரன், நெல்லையப்பர், காந்திமதியம்மை