பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு 莎台9线 குறுக்குத் துறை முருகன் இவர்களின் தரிசனத்தை ஒரு நாளில் முடித்துக் கொண்டோம். அடுத்த நாள் சிற்றுந்து வசதி இருந்தமையால் ஆழ்வார் திருநகரி, திருக்கோளுர், திருப்பேரெயில், சிரீவைகுண்டம், வரகுண மங்கை, திருக் குளங்தை, திருப்புளிங்குடி, தொலைவிலி மங்கலம் (இரட்டைத திருப்பதிகள்) ஆகிய ஒன்பது தலங்களின் சேவையும் ஒரே மூச்சில் நிறைவெய்தியது, இறுதியாகச் சேவித்தது திருப்பேரெயில் சேவை முடிந்து திரும்பும்போது சிற்றுந்து பழுதாயிற்று. அவர்களைப் பழுது பார்த்து வருமாறு சொல்லிவிட்டு நாங்கள் பேருந்தில் நெல்லை திரும்பி விட்டோம். நெல்லை திரும்பியதும் புத்தகக் கடைக்குச் சென்று செங்கையா பிள்ளையைக் கண்டு நன்றி தெரிவித்துவிட்டு விடுதியில் வந்து ஒய்வு எடுத்துக் கொண்டோம். நவ திருப்பதி சேவையில் இரட்டைத் திருப்பதிகளின் சேவை மிக்க சிரமத்துடன் கிடைத்தது. தண் பெருகை ஆற்றின் இக்கரையில் வண்டியை நிறுத்தி விட்டு சரியான வெயிலில் ஆற்றைக் கடக்கும்போதும் திரும்பும் போதும் பொடி தாங்க முடியவில்லை. தவக்கல்ைபோல் அதை நன்கு அநுபவித்து மகிழ்ந்தோம். அடுத்த நாள் இருப்பூர்தியில் சாவகாசமாகத் திருச்செந்தூர் சென்று செந்தில்குமாரனைத் தரிசித்துப் திரும்பினோம். மறுநாள் திருக்குறுங்குடிச் சேவையையும் வானமாமலைச் (நாங்கு நேரி)சேவையையும் நிறைவு செய்துகொண்டுநாகர்கோவில் வந்து சேர்ந்தோம். நாகர்கோயிலில் எஸ். ஆர். எஸ். கடை இருந்தது. கடையாட்கள் தங்க ஒரு பெரிய வீடும் இருந்தது. இங்குத் தங்கி மலை நாட்டுத் திருத்தலப் பயணத்தைத் தொடங்கினோம். திருப்பதி திரும்பியதும் பாண்டிநாட்டுத் திருப்பதிகள்' என்ற தலைப்பில் 18 கட்டுரைகள் எழுதி நூலாக வெளியிட்டேன். (மார்ச்சு1977). இஃது என்னுடைய முப்பத்தொன்றாவது வெளியீடு,