பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-227 71. கம்பராமாயணக் கருத்தரங்கு கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம் என்பது காரைக்குடிக் கம்பன் அடிப்பொடிக் கண்ட இலக்கியப் போர்க்குரல் (Slogan). திருப்பதியிலும் இதைச் செய்ய நினைத்தேன் 1976-இல். பல்கலைக் கழக மானிய இணையத்திற்கு விரிவான திட்டம் அனுப்பி ரூ. 6000மானியம் பெற்றேன். இதில் கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழை (சுமார் 40 ஆண்டுகளாக) வளர்த்து வரும் கம்பன் அடிப்பொடி (காரைக்குடி சா. கணேசன்). ஜஸ்டிஸ் எஸ். மகராசன், தமிழ் இலக்கிய வரலாற்றை விரிவாக எழுதி வரும் அறிஞர் மு. அருணாசலம், டாக்டர் B. கோபாலரெட்டி இவர்களை கலந்து கொள்ளச் செய்ய நினைத்தேன். இந்த ஆண்டு நான் ஒய்வு பெறப்போகும் ஆண்டு (செப்டம்பர்-1977), இந்த எண்னத்தைத் துணைவேந்தரிடம் தெரிவித்து அவருடைய இசைவையும் பெற்றேன். கருத்தரங்கு ஆகஸ்டு 1-3 1977)-ல் நடைபெற்றது மிகச் சிறப்பாக. டாக்டர் B. கோபால ரெட்டி அவர்கள் ("சுதர்சனம்’ நெல்லூரில்) வசித்து வருபவர். சென்னையில் இராஜாஜி. முத்ன்முதல் முதல் அமைச்சராக இருந்த காலத்திலும் மீண்டும் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் தமிழக அமைச்சரவையை அணி செய்த பெருமகனார். ஆந்திரம் தனியாகப் பிரிந்த பிறகு, அங்கும் அமைச்சராகப் பணியாற்றி பின்னர் நடுவண் அரசில் நேருவின் அமைச்சரவையில் சில ஆண்டுகள்