பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 2 நினைவுக் குமிழிகள்-4 பணியாற்றியவர். இறுதியில் ஐந்தாண்டுகள் உத்தரப் பிரதேசத்து ஆளுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்று நெல்லூரில் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு நான் எழுதியதுடன் துணைவேந்தரையும் எழுதச் செய்து கருத்தரங்கைத் .ெ த ர ட ங் கி ைவ; க்கக் கேட்டுக் கொண்டோம்; ஒப்புக் கொண்டார். கம்பன் அடிப் பொடியை முதல் அமர்வுக்குத் தலைமை தாங்க ஒப்புக் கொள்ளச் செய்தேன். கம்பன் அடிப்பொடி இல்லாத கம்பராமாயணக் கருத்தரங்கு பருப்பு இல்லாத கல்யாணம் போன்ற தல்லவா? கம்பனில் திளைத்து ஆங்கிலத்திலும் கம்பனைக் காட்டும் ஜஸ்டிஸ் S. மகராசன் (நீதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்று சட்ட ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்) தொடக்க விழாவில் அடிப்படைக் கருத்தமையும் (Key-not address) சொற்பொழிவை நிகழ்த்தவும்,இலக்கியவரலாற்று அறிஞர் மு. அருணாசலத்தைக் கம்பன் படத்தைத் திறந்து வைக்க வும் கேட்டுக் கொண்டதற்கேற்ப ஒப்புக் கொண்டார்கள். வழக்கப்படி துணைவேந்தர் பேராசிரியர் K. S. மூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார்கள். எனது வரவேற்பு உரையில் திரு கோபால ரெட்டியைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை (1960) நினைவுக்குக்கொணர்ந்து அவரையும் அவையோரையும் வியக்க வைத்தேன். நான் 1960-இல் திருப்பதிப் பணிக்காக விண்ணப்பம் அனுப்பிய வுடன் சென்னையில் அமைச்சராக இருந்தபோது வசந்த விகாரில் (சென்னை-600 028) சந்தித்த ஒரு நாளை நினைவூட்டி திருப்ப்திப் பணி கிடைக்க உதவுமாறு எழுதி யிருந்தேன். அதற்கு அவர் எழுதிய மறுமொழி: மிஸ்டர் ரெட்டியார், உங்கள் கடிதம் வந்தது. திருப்பதியில் பணி யாற்ற நினைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. வேறு விண்ணப்பதாரர்கள் யாவர் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு நல்ல நிர்வாகத்தில் தலையிட விரும்ப வில்லை. நீங்கள் உங்கள் சொந்தக் காலிலேயே நிற்க