பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணக் கருத்தரங்கு 57器 முயல வேண்டும். வாழ்த்துகள்' என்பது பதவிக்கான பேட்டி சென்னையில் துணைவேந்தர் இல்லத்தில் (ஆர்மஸ் சாலை, கீழ்ப்பாக்கம்) நடைபெற்ற பேட்டியில் தேர்ந் தெடுக்கப் பெற்றேன். சில நாட்களில் நியமன ஆணையும் வந்தது. மீண்டும் திரு. ரெட்டிக்கு எழுதினேன். பெரியீர், தங்கள் யோசனைப்படி .ெ ாந்தக் காலில் நின்றே, யாரொருவரின் பரிந்துரையுமின்றி. நியமனம் பெற்றேன்’ என்று. அதற்கு அவர் எழுதிய மறுமொழி. மிஸ்டர் ரெட்டியார், உங்கள் கடிதம் வந்தது நியமனம் பெற்றது பற்றி மிக்க மகிழ்ச்சி. பிறர் தலையீடின்றி ஒருவர் தம் முயற்சியாலேயே பதவிகிடைத்தால் அதனால் அவர் அடை யும்மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை. இதைக் கருதிதான் உங்கள் காலில் நிற்குமாறு பணித்தேன் . வாழ்த்துகள்' என்பது . என் வரவேற்பு உரையில் இரண்டு கடிதங்களின் வாசகங் களையும் அப்படியே சேர்த்துப் படித்தேன். தில்வி அரசு முத்திரையுடன் எழுதிய இரண்டு கடிதங்களையும் (1960) அவையோருக்கும் காட்டினேன் (1977) திரு ரெட்டி வியந்து போனார். அவர் அடைந்த மகிழ்ச்சியால் முகம் மலர்ந்ததை அனைவரும் கண்டனர்: கையொலி எழுப்பி னர், பேராசிரியர் K. S. மூர்த்தியும் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்தார். இத்தகைய துய்மையான உள்ளத்துடன் அரசுப் பணிகளைத் தெய்வப் பணியாக ஆற்றி ஓய்வு பெற்று இன்றும் நம்மிடையே அவையை அலங்கரிக்கும் பெரியாருக்கு துறையின் நன்றி என்றும் உரியது' என் வாசகத்தைப் படித்ததும் மீண்டும் ஒரு கைதட்டல் கேட்டது. தொடக்க விழாவின்போதே கம்பன் அடிப் பொடியை அவையோருக்கு அறிமுகப்படுத்தும் பாங்கில் ஒரு வரவேற்புரையும், (பாடல் கம்பராமன் எழுதியது) திரு. கோபால ரெட்டியை அறிமுகப்படுத்தும் போக்கில் 1. கம்பன் அடிப்பொடியும் ஜஸ்டிஸ் மகராசனும் சில ஆண்டுகட்கு முன்னர் திருதாடு அலங்கரித்து வட்டார்கள். (1999)