பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/608

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

沥74 நினைவுக் குமிழிகள்-4 தெலுங்குக் கவியில் ஒரு வரவேற்புரையும் (பாடல், கணிதப் பேராசிரியர் P. W. அருணாசலம் எழுதியது) படித்துக் கொடுக்கப் பெற்றன. கம்பனடிப்பொடிக்குத் தந்த வரவேற்புரை இது. வரவேற்பு மடல் வண்ணமுறும் பொதியமலை தன்னில் தோன்றி வளம்நல்கும் வையையினில் தவழ்ந்து வேம்டன் புண்ணியநற் சங்கத்தில் வீற்றி ருந்து புகழ்பெற்ற தமிழன்னை செங்கோல் ஒச்சக் கண்ணனைய பெருங்கோயில் கண்ட நம்பீ! கலைத்தமிழுக் குணர்வளிக்கும் புனித நம்பீ! தண்ணமுதம் எனக்குளிர்ந்த உள்ள நம்பீ! சால்புநிறை நின்வரவால் உயர்ந்தோம் வாழி! மாதகவார் காந்தியருள் நெறியில் ஏகி மாசற்ற சக்தியத்தின் சுடரைக் கண்டாய்! போதமுறு பாரதியின் வதன சோதிப் பொலிவினால் இலக்கியத்தின் நுட்பங் கண்ட ப் கோதங்கன்ற ராஜாஜி நட்பி னாவே கொள்கையினில் தளராத உறுதி கண்டாய் ஏதமிலா புகழுடைய கணேச நம்பீ! இவற்றாலே தமிழகத்தின் தீப மானாய்! செந்தமிழ்த்தாய் ஒருகோடி யாண்டு செய்த செழுந்தவத்தின் பயனான கம்ப நாடன் சந்ததமும் புரிந்திட்ட நோன்பி னாலே தகவுடனே அவதரித்தாய்! கலைஞர் கோவே! முந்துறயாம் பகர்ந்தமொழி முகமன் அன்று மூவாத தமிழகத்துப் பட்டி மன்றம் சிந்தைநிறை கவியரங்கம் கம்ப னுக்குத் திகழ்கின்ற பதிப்புக்கள் யாவும் சாட்சி