பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணக் கருத்தரங்கு . 575 சிற்பத்தில் கல்வெட்டில் புனிதப் பண்ணில் சீர்மிக்க சொல்லாய்வில் மருத்து வத்தில் கற்பனையின் முதிர்ச்சிவளர் கவிதை யாய்வில் கம்பனடிப் பொடியே! நின் ஒப்பா ரில்லை பொற்புறு நின் முற்றத்தில் சிந்தும் சொல்லைப் பொலிவுடனே தொகுத்தவர்கள் டாக்ட ராகி முற்பட்ட புகழ்பெறுவர் கவிஞர் கோவாய் மூவாத கம்பனுக்கே அடிமை யாவார். மங்கலமார் கம்பனடிப் பொடியே! நீங்கா மகிழ்வுடன் நீ புரிதொண்டு முற்றும் கண்டோம்: பொங்குமனக் களிப்புற்றோம்; இதயத் தாலே புகழ்மிக்க தமிழ்த்தாய்க்கு வடிவம் தந்தாய்; கங்கையெனச் சிறப்புறுக; வேங்க டத்தில் கருணையே வடிவாக மேவு கின்ற பங்கயக்கண் எம்பெருமான் அருளி னாலே பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! -தமிழ்த் துறை அன்பர்கள் இந்த விழாவிற்குத் வந்த திரு. கோபால ரெட்டியும் கம்பனப் பொடியும் முதன் முதலில் கண்ட போது பேரவை மண்டபத்தின் முன்னுள்ள அறையில் ஒருவரையொருவர் தழுவி வரவேற்றுக் கொண்டது வந்திருந்தோர் கண்பெற்ற பயன், இருவரும் நாட்டு விடுதலை வேள்வியில் சிறைச் சாலை நண்பர்கள்! மறுநாளும் அதற்கு அடுத்தநாளும் நான்கு அமர்வுகள் நடைபெற்றன. கம்பனைப் பலகோணங்களில் ஆய்ந்த ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப் பெற்றன. வேங்கடத்தின் சிறப்பை, இருவினையும் இடைவிடா எவ்வினையும் இயற்றாதே இமையோர் ஏத்தும் திருவினையும் இடுபததேர் சிறுமையையும் முறையொப்பத் தெளிந்து நோக்கிக்