பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 நினைவுக் குமிழிகள்-கி. கருவினைய திப்பிறவிக் கென் றுணர்ந்தங் கதுகளையும் கடையின் ஞானத்து அருவினையின் பெரும்பகைஞர் ஆண்டுளfண் டிருந்தும் அடி வணங்கற் பாலார். தோதவத்தித் துய்மறையோர் துறையாடு நிறையாறுஞ் சுருதித் தொன்னூல் மாதவத்தோர் உறைவிடனும் மழையுறங்கும் மணித்தடமும் வான மாதர் இதமொத்த கின்னரங்கள் இன்னரம்பு வருடுதொறும் கிளக்கும் ஒதை போதகத்தின் மழக்கன்றும் புலிப்பறழும் உறங்கிடனும் பொருந்திற் றம்மா!' என்று காட்டிய கம்பநாடனின் புகழ் அதன் அடிவாரத்தில் திகழும் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் சார்பில் நடைபெற்ற கம்பராமாயணக் கருத்தரங்கில் விரித்தோதப் பெற்றது. தமிழ்த்துறையினரும் பிறரும் தமிழ்த்தொண்டு புரிந்த மனநிறைவு பெற்று மகிழ்ந்தனர்: எம்பெருமானின் திருவருளுக்கும் பாத்திரமாயினர். இன்னொரு குறிப்பு சண்டுக் காட்டவேண்டியது இன்றியமையாததாகின்றது. து ைண .ே வ ந் த ர் தம் தலைமையுரையில் நான் ஒய்வு பெறப் போவதாகவும், விதி இடங்கொடுக்காததால் என்னை 65 - வயது வரை வைத்துக் கொள்வதற்கு இயலவில்லை என்றும் கூறினார். அடுத்து ஜஸ்டிஸ் மகராஜன் பேசும்போது அவரும், 'விதி இடங்கொடுக்காவிட்டாலும் துணைவேந்தர் நினைத்தால், ஒரு திறமையான வருக்கு வி. விலக்கு அளித்துப் பதவிக் காலத்தை நீட்டிக்கலாம் என்றும், டாக்டர் ரெட்டியாரின் திறமையும் பக்தியுடன் பணி யாற்றும் முறையும் துணைவேந்தர் மனத்தைக் கவர்ந்து -سچ-سم--سمسس۔--سسسمجسمہدم،سانسس بسسہ 1. கிங்கிந்தை - நாடவிட்ட 27, 28