பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணக் கருத்தரங்கு 577 விட்டது என்பது அவரது தலைமையுரையால் தெளிவாகப் புலனாவதால் துணைவேந்தர் தம் கருத்தினை மறு ஆய்வு செய்து பதவியை நீட்டித்தால் துறைக்கு நல்லது என்றும், பல்லாண்டுகள் பேராசிரியர் பதவி கிடைக்காமல் துன்பப் பட்டதெல்லாம் பதவி நீட்டிப்பால் தீரும் என்றும் நானும் உடல்நலத்துடன் காணப் பெறுவதால் துணைவேந்தர் இரண்டிரண்டு ஆண்டுகளாக நீட்டிப்பதைக் கருதலாம் என்றும்இடைப்பிறவரலாகப்பேசிகூட்டத்தை உருகவைத்து விட்டார். துணைவேந்தர் பேசும் போது டாக்டர் தாமோதரனின் மனம் மலர்ச்சியுடன் காணப்பட்டதையும், ஜஸ்டிஸ் பேசும்போது மனம் சுருக்கம் அடைந்ததையும் மலர் என்னிடம் சொன்னார்கள். கூட்டம் முடிந்ததும் மனம் தாளாமல் ஜஸ்டிஸ் அவர்களைப் பார்த்து உங்கள் பேச்சு துணைவேந்தர் உள்ளத்தை உருக்கி விட்டது. நீங்கள் அனாவசியமாகப் பேசி டாக்டர் ரெட்டியாருக்கு ஆசையை உண்டாக்கி விட்டீர்கள்’’ என்றாராம். அதற்கு ஜஸ்டிஸ் அவர்கள் நல்லதைத்தானே சொன்னேன். டாக்டர் ரெட்டியாருக்குப் பதவி நீட்டிப்பு கிடைத்தால், இந்த மரபின் பயனை நன்கு பணியாற்றுவோர்களெல் லாம் பின்னால் அநுபவிக்கலாமல்லவா? துறை வளர்ச்சிக் கும் இது நல்லதுதானே. அவருக்குக் கிடைப்பதால் உங்கட்கு மகிழ்ச்சி இல்லையா?' என்று சொன்னாராம் பகல் விருந்திற்குப் பிறகு பிற்பகல் என்னிடம் இதை ஜஸ்டிஸ் தெரிவித்தார். அவர் யார்? மட்டரகமான பேர் வழியாக இருப்பார் போல் காணப்படுகின்றாரே' என்றார். "பொறாமைக்கு இலக்கணம் இவர் என்று சொல்லி வாளா இருந்துவிட்டேன். நி - 37