பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி - 268 72 என். பிஎச் டி. ஆய்வுக் கட்டுரை வெளியீடு såsses, ஒய்வு பெறுவதற்குமுன் என்னுடைய பி எச். டி ஆய்வுக் கட்டுரையை பல்கலைக் கழக வாயிலாக வெளியிட அரும்பாடு பட்டேன். முடியவில்லை. திருவேங்கடவன் பல்கலைக்கழகம் இதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை. இப்படிச் சொல்வதை விட பொதுவாக ஆராய்ச்சி வெளியீடுகள் வெளிவருவதில் உற்சாகம் காட்ட வில்லை. இதற்கென்று திட்டவட்டமாகச் சொல்லப் பெறாத (Umassigned) மானியக் கணக்கில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கப் பெறும். அதை ஒவ்வொரு துறைக்கும் பகிர்ந்து அளிக்கப்பெறும். இத் தொகையைப் பகிர்ந்தளிப்பதில் பொறுப்பற்ற செயல் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு துறையிலுமிருந்து இத்தகைய வெளியீடுகளுக்கு உத்தேச மதிப்பு கேட்டு அதன் பின்னர் இருப்பில் இருக்கின்ற தொகையை எப்படிப் பகிர்ந்தளிக்கலாம் என்பதைப் பற்றி பல்கலைக் கழக நிர்வாகமோ அல்லது பேராசிரியர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவோ அமைத்து அதன் யோசனைப் படியோ செலவிடும் முறையைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து அதன் படி செயற்படலாம் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் எந்த ஒரு முறையினையும் மேற்கொள்வதாகத் தெரிய வில்லை. ஆய்வுக்கட்டுரையை வெளியிடுவதற்கு உதவு மாறு பலதடவைப் பல்கலைக் கழகத்திற்கு எழுதியும் மறு மொழி இல்லை. இதைப்பற்றி நான் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு நாள்