பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பிஎச். டி. ஆய்வுக் கட்டுரை வெளியீடு 579 ரூ. 2500 = தமிழ்த் துறைக்கு ஒதுக்கப் பெற்றிருப்பதாகக் கடிதம் வந்தது. பல துறைக்கும் இருப்புத் தொகையை இவ்வாறு கிருஷ்ணன் கோயிலில் சுண்டல் தருவதுபோல் பகிர்ந்தளிக்கப் பெற்றது போலும் என்று நினைத்துக் கொண்டேன். ஒரு சில ஆண்டுகளைக் கவனித்ததில் எந்தத் துறையிலும் எந்த நூலும் வெளிவந்ததாகத் தெரிய வில்லை. பெரும்பாலும் இவ்வாறு ஒதுக்கப்பெற்ற தொகைகளைப் பெரும்பாலான துறைகள் பயன்படுத் தாமல் உரிமையழிந்து போயிருத்தலைக் கண்டேன். இப்படிப் போகாமல் தேவையான துறைகட்கு மட்டிலும் உத்தேசச் செலவு கேட்டு வழங்கப்பெற்றிருப்பின் அத்தொகைகள் பயனுள்ள முறையில் செலவிடப் பெற்றி ருக்கும். பசியே இல்லாதவனுக்கு சோறுபோட்டால் அவன் அதை என்ன செய்ய முடியும்? சோறுதான் வீணாகும் இது போன்ற செயல்தான் தேவையில்லாதிருக்கும் துறை கட்குப் பகிர்ந்தளிப்பது. இப்படித்தான் நிர்வாகம் சிந்தனையற்றுச் செயற்பட்டால் அது வெறும் வினை'யாக முடியும். நல்வினை தீவினை செய்பவனிடம் செயற் படுவது போல வெறும் வினை யாருக்கும் பயன்படா தொழியும். ரூ.2500/- தாள் வாங்குவதற்குக் கூடப் போதாதே; இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று மனம் தீவிரமாகச் செயற்பட்டது. என்னுள் அந்தர்யாமியாக விற்றிருக்கும் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங் கொண்டலாகிய ஏழுமலையப்பன் ஒளிகாட்டி வழிகாட்டி னான். தமிழக அரசு தந்த மானியத்தில் ஏதாவது எஞ்சி யிருக்குமா என்று உசாவு என்னை நெறிப்படுத்தினான். வளர்ச்சித்துறை அலுவலர் திரு. இராகவ ரெட்டியைச் சந்தித்து விவரம் கேட்டேன். முதிர்ந்த நிலையிலிருந்த அப்பெருமகன் கிட்டத்தட்ட ரூபாய் 6000/- வரை இருக்கும் என்று தெரிவித்தார். 'என்னுடைய ஆய்வுக் கட்டுரை வெளியிட ரூ. 2500/- தான் பல்கலைக் கழகம்