பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔&6 நினைவுக் குமிழிகள்-4 அனுமதித்துள்ளது. தாள் வாங்குவதற்குக் கூட இது போதாது. இந்நிலையில் இந்த ரு 6000/- ஐதமிழ்த் துறைக்கு ஒதுக்கித் தந்தால் கட்டுரை வெளிவருவதற்கு. முயலலாம்" என்று அவரிடம் சொன்ன போது, இவற்றையெல்லாம் தெரிவித்து விவரமாக ஒரு கருத்துரு, (Proposal) 5ustif G+urgy பல்கலைக் கழகத்திற்கு எழுதுங்கள். நான் துணைவேந்தருக்குக் குறிப்பு வைத்து இசைவு பெறுகின்றேன்' என்று அவர் அன்புடன் தெரிவித்தார். நானும் உடனே இந்த விவரங்களை யெல்லாம் உட்கொண்ட விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். இங்ங்னம் செய்த பிறகும் எனக்கு இருப்பு கொள்ள வில்லை. பல்கலைக் கழக அச்சகத்தின் இயக்குநராக ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் பணிசெய்து கொண்டிருந்தவர் திரு.B.S.K. இராமச்சந்திரன்; இவர் வேலூரைச் சேர்ந்த பிராமணர். இவர் திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.ஏ. பட்டம் பெறுவதற்கு, ஒல்லும் வகையெல்லாம் உதவினேன்; பட்டமும் பெற்றார். இதற்கு முன்னர் அவர் இடைநிலை வகுப்புத் (Intermediate) தேர்வு பெற்றிருந்தார். இவர் என் வேலையை. உடனே எடுத்துக் கொண்டு முடித்துத் தருவதாக வாக்குறுதி தந்தார். ரூ 8500/- தான் உள்ளது; இதற்கு மேல் கிடைக்க வழி இல்லை. நான் அறிந்த வரையில் ரூ 10,000க்கு மேல் செலவாகலாம். என்ன செய்வது என்று தெரியவில்லை.' என்று சொன்னபோது உங்கள் கட்டுரையைத் தாருங்கள். உத்தேசச் செலவு போட்டுப் பார்க்கலாம். அதன் பிறகு முடிவு சொல்லுகின்றேன்' என்று அன்புடன் சொன்னார். இஃதெல்லாம் டாக்டர் D. சகந்நாத ரெட்டி துணைவேந்தராக இருந்தபோது நடந்தன. இரண்டு தொகுதிகளாகக் கட்டமைத்துத் தந்திருந்த ஆய்வுக் கட்டுரையைத் தந்தேன். அவர் தாள் செலவு,