பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/615

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என். பிச். டி. ஆய்வுக் கட்டுரை வெளியீடு 581 அச்சுக்கூலி, கட்டமைப்புக் கூலி இவற்றை விவரமாகக் கணக்கு போட்டு ரூ 8500 - தொகையைக் கொண்டு 259 படிகள்தாம் அடிக்கலாம் என்று சொன்னார். நானும் இந்த விவரங்களையெல்லாம் குறிப்பிட்டு ரூ 8500/-ஐ அச்சகக் கணக்குக்கு மாற்றுமாறும், இத்தொகையைக் கொண்டு 250 படிகள்தாம் தயாரிக்க முடியும் என்று தெரிவித்தும் பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் எழுதினேன். நான் கேட்டவாறே ரூ 8500/- அச்சகக் கணக்கிற்கு மாற்றப்பெற்றது; 250 படிகள் அடிக்குமாறும் அச்சகத் திற்கு ஆணையும் பிறப்பிக்கப் பெற்றது. வேலையும் வேகமாக நடந்தது. கிட்டத்தட்ட அச்சிலேயே ஆயிரம் பக்கம் வரும் நூல் இரண்டாண்டுகள் வரை அச்சி வேலை தொடர்ந்தது. பல்கலைக் கழகப் பல வேலைகளுடன் இந்த வேலையும் நடை பெற்றதால் இடைஇடையே சுணக்கம்; 1977 மார்ச்சு வாக்கில் வேலையும் முடிந்தது.

  • IIasi st-osor “Religion and tRhilosophy of Nalayiram with Special Reference to Nammalvar” stair sp தலைப்பில் அமைந்தது; நூல் ஆங்கிலத்தில் 960 பக்கமாக வளர்ந்தது. துணைவேந்தர் தத்துவத் துறையைச் சேர்ந்த வராதலாலும் நூலும் தத்துவத்துறை (விசிட்டாத்வைதம்) பற்றியதாதல்ாலும், அஃது ஆங்கிலத்தில் அமைந்திருந்த தாலும் துணைவேந்தரை Forword ஒன்று தருமாறு வேண்டினேன்; அவரும் ஒப்புக் கொண்டார். அச்சிட்ட படிவங்களிளை அவரிடம் தந்திருந்தேன். ஒன்றிரண்டு மாதங்கள் கடந்த பின்னர் நூல் பெரிதாக உள்ளது. படிக்க நேரம் இல்லை. தங்கட்கு ஏமாற்றத்தை விளை வித்தற்கு வருந்துகின்றேன்' என்று சொல்லி விட்டார். மேலும் 'டாக்டர் தாமோதரன் கூட ஒரு நூலுக்கு அணிந்துரை கேட்டார். அவருக்கும் முடியாது என்று தெரிவித்து விட்டேன் என்றார். அவர் ஒன்றும் நூல் எழுத வில்லையே' என்று கூறும்போது, 'அவர் ஆசாரிய இருதயம்என்றநூல்பற்றிஎழுதிய(M. Litt)ஆய்வுக்கட்டுரை