பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 நினைவுக் குமிழிகள்-4 ஆய்வுக்கட்டுரைக்குத் தருமாறுகேட்டார். நூல் சர்.சி. பி. இராமசாமி அய்யர் முன்னுரை எழுதி வெளிவந்த நூலுக்கு. முன்னுரை தருமாறு கேட்டார். நான் சர்.சி.பி எழுதி விட்ட பிறகு, நூலும் வெளிவந்த பிறகு என் மூன்னுரை தேவையற்றதே" என்றேன். அதற்கு அவர் சர் சி.பி. இப்போது இல்லை. அதனாலே கேட்டேன்’ என்றார். இம்மாதிரி முன்னுரை வழங்குவோர் இறந்த பிறகு, மீண்டும் முன்னுரை பெற்றுக் கொண்டே போனால் நூல் முன்னுரைகளை விடச் சிறிதாய்த் தோன்றுமே" என்றேன். அதன் பிறகு அவரும் போய்விட்டார்’ ’ என்று சொன்னார். நான் தாங்கள் என் நூலுக்கு முன்னுரை வழங்குவதைத் தடுப்பதற்காகவே இத்திட்டம் அவர் திட்டம் நிறைவேறியது' என்று சொல்விக் இகாண்டு படிவங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு வருத்தத்துடன் திரும்பினேன். துணைவேந்தர் முகத்தி லும் சோகக்களை தென்பட்டது. அப்பொழுது இராஜாஜி வாழ்ந்திருந்தார். கேட்டி ருந்தால் கிடைத்திருக்கும். இராஜாஜியை ஆந்திரர்கள் வெறுப்புவர்கள். அவர் முன்னுரை தவறான கருத்தை விளைவிக்கும் என்று கருதி அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். பின்னர் ஓய்வு பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ். இராதா கிருஷ்ணனுக்கு முன்னுரை (Forword) தருமாறு எழுதினேன். அவருடைய தனி அலுவலர் தற்சமயம் மனநிலை சரியில்லையென்றும் டாக்டர் முற்றும் ஒய்வு எடுத்துக் கொள்ளுமாறு கூறி யிருப்பதாகவும் ஆதலால் அவர் தருவதற்கில்லையென்றும் வருத்தத்துடன் மறுமொழி தந்தார். அதன் பின்னர் திரு. S.A. அனந்தசயனம் அய்யங்கார் (முன்னாள் பீஹார் ஆளுநர்) அவர்களை நாடினேன். என்மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தவராதலால் தருவதற்கு ஒப்புக் கொண்டார். தமக்குக் கண்ணொளி மங்கி விட்ட தென்றும், 19 நாட்கள் நாடோறும் மாலை ஐந்து