பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என். பிஎச். டி. ஆய்வுக் கட்டுரை வெளியீடு 533 மணிக்குத் தம் இல்லம் போந்து, நூல்பற்றி விளக்க வேண்டும் என்றும், சில இயல்களில் முக்கிய பகுதிகளைப் படித்துக் காட்டவேண்டும் என்றும் கூறினார். நானும் அவ்வாறே அவர் இல்லம் சென்று படித்துக் காட்டினேன்: மிகவும் கூர்ந்து கவனித்தார். பத்தாம் நாள் தம்முடைய சுருக்கெழுத்தாளரை வரச் சொல்லி தாம் நல்கும் முன்னுரையைக் கூறினார். நூலிலுள்ள பொருளைப்பற்றி விவரமாகக் கூறியதைப் பற்றி வியந்து போனேன். ஆச்சரியமான நினைவாற்றல் கொண்ட ஒரு மாமேதையை அன்றுதான் காண முடிந்தது. அடுத்த நாள் வந்து தட்டச்சு செய்த படியை வாங்கிப் போகுமாறு பணித்தார். அடுத்த நாள் சென்றபோது தட்டச்சுப்படி தயாராக இருந்தது. என்னை ஒருமுறை அதனை வாய்விட்டுப் படிக்கச் செய்தார்; அதைத் தானே நன்கு அநுபவித்ததை அவர் முகத்தில் காண முடிந்தது. பின்னர் அவரை வணங்கி ஆசியுடன் தந்த முன்னுரையைப் பெற்றுக் கொண்டேன் : என்னுடைய நூல்முகத்துடன் அதையும் நூலின் முற் பகுதியில் சேர்க்க வேண்டியவற்றையும் அச்சகத்தில் சேர்த்தேன். இந்த அரிய பெரிய நூலை நம் நாட்டின் தத்துவ மேதை டாக்டர் சர்வே பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கட்கு அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். ஒரு வைணவப் பெரியாரின் முன்னுரையும் ஒரு தத்துவ மேதைக்குத் தந்த அன்புப் படையலும் நூலைப் பொலி வடையச் செய்தன. இஃது என்னுடைய முப்பத்திரண் டாவது வெளியீடாகும். (மே-1977). இது பல்கலைக் கழக வெளியீடாகவும் அமைந்தது என்னுடைய பெரும் பேறாகும். இந்த நூலை வைணவக் களஞ்சியம் என்று பலர் போற்றுவது என் காதில் விழுந்து கொண்டுள்ளது.