பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-229 73. கினைவுச் சிதறல்கள் என் திருப்பதி வாழ்வு கிடைத்தற்கரிய ஒரு திவ்வித தேச வாழ்வாகும். இந்த வாழ்வின் இறுதிக் காலத்தை மனத்திற் கொண்டு இந்தப் 17-ஆண்டு வாழ்வில் இன்னும் ஏதாவது நிகழ்ச்சிகள் விட்டுப் போயினவா என்பதை நினைவுகூர்கின்றேன். அரிமா நோக்காக நினைவில் எழுபவற்றை இந்தக் குமிழியில் வெளியிடுகின்றேன். go を製 & 鑫夺 cro நான் அறையில் தனியாக வாழ்ந்த காலத்தில் இந்தித் துறை அன்பர்கள் திருமலைக்கு நடந்து போய் நடந்து திரும்பத் திட்டமிட்டனர். அவர்களுடன் சேர்ந்து அதிகாலையில் 4 மணிக்கே கிளம்பினேன். காலை 7 மணிக்குத் திருமலையை அடைந்தோம், கோனேரியில் தீர்த்தமாடி ஏழுமலையானைச் சேவித்தோம்.தீர்த்தமாடிக் கரையை அடைந்தபோது ஒரு கறுத்தப் பெரிய திருமேனியைக் கொண்ட ஒருவரைக் கண்டோம். அவர் இரண்டு சிறிய பாட்டல்களில் வெள்ளைத் திருமண், திருச்சூர்ணம் இவற்றைக் கரைத்த நிலையில் வைத்துக் கொண்டு தீர்த்தமாடி வருபவர்க்குத் திருமண் சாத்தும் கைங்கரியத்தை மேற் கொண்டிருந்தார். திருமண் சாத்தப் பெற்றவர்கள் 50 பைசா, 1 ரூபாய்...என்று அவருக்குச் சன்மானம் செய்தனர். சில வடநாட்டுச் சேட்டுகள்--செல்வச் செழிப்புள்ள சீமான்கள்-ரூ. 5/கூடத் தந்ததை நேரில் கண்டேன். அவரிடம் பேச்சுக் கொடுக்க ஆர்வங் கொண்டு பேசியபோது தமக்குத் தினந் தோறும் இவ்வகையில்ரூ. 25/-க்குக் குறையாதவருமானம்