பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 587 ஆறலைத் துண்ணும் வேடர் அயற் புலம் கவர்ந்து கொண்ட வேறுபல் உருவின் மிக்கு விரவுஆன் நிரைக ளன்றி ஏறுடை வானந் தன்னில் இடிக்குரல் எழிலி போடு மாறுகொள் முழக்கங் காட்டும் மதக் கைமா நிரைகள் எங்கும்’ என்ற சேக்கிழார் பாடல்கள் நினைவிற்கு வர இந்த இயற்கைக் காட்சிகளையெல்லாம் நண்பர்கட்கு ஆங்கிலத் தில் விளக்கினேன். இப்போது நண்பகல். 'உண்ணும் சோறு பருகும் நீர் எங்கள் கையில் இருந்தன, அவற்றை உட்கொண்டு பசியாறினோம். ஒர் இனிய புங்கமரத்தின் நிழலில் ஒய்வு கொண்டோம். பெரும்பாலும் நான் என் நண்பர்களின் வீர வழிபாட்டுக்குரியவனாக இருந்தேன். என்னுடைய நகைச்சுவைப் பேச்சையும், செயற்கைப் பேச்சுத் திறமையையும் டாக்டர் சந்திரபானு ராவுத், டாக்டர் பூரீதர்சிங், டாக்டர் ராம் பாபு சர்மா, டாக்டர் ஜனார்தன செல்லேர், டாக்டர் போரா முதலியோர் மிகவும் ஈடுபட்டுச் சுவைப்பர். இவற்றையெல்லாம் இப்போது நினைவு கூர்ந்து அசை போடுகின்றேன். ● 酸 © o 33 む。 குடும்பம் காரைக்குடியிலிருந்தபோது மானியம் பெறும் விஷயம் சம்பந்தமாக அடிக்கடிச் சென்னைப் பயணம் இருந்து வந்தது. ஒருநாள் தி. நகர் அரங்கநாதன் தெருவிலுள்ள சிற்றுண்டி விடுதியில் சிற்றுண்டி உண்டதாக நினைவு. அப்போது சென்னையில் பரவலாக இருந்த டிங்கிக் காய்ச்சல்' என்னைப் பற்றிக் கொண்டது. திருப்பதி வந்ததும் நடக்க முடியாத நிலை. 2. பெ. பு: கண்ணப்ப. 4, 5, 6