பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

断88 - நினைவுக் குமிழிகள்-4 ஆள் மிதிவண்டியில் கூட மருத்துவர் வீட்டிற்குச் செல்ல முடியாத நிலை. அருகிலுள்ள ஆரோக்கியபவன் அய்யர் பட் என்பார் இரண்டு நாட்கள் அறைக்கே சிற்றுண்டி பால் அனுப்பினார். கழிப்பறைக்கு நகர்ந்து கொண்டுதான் சென்று வரும் நிலை ஏற்பட்டது. ஏழுமலையானே மருத்து வனாய் நின்று என்னைக் காத்தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை தியானமும் இறைவன் நினைவும் இத்தகைய சந்தர்ப்பங்களில் காத்து வருகின்றன. 口 瞿 亡瑞 பல்கலைக் கழக நூலகத்தில் தமிழ் உருது நூல்கள்தாம் வகைப்படுத்தப் பெறாமல் கிடக்கின்றன. ஒரு நூலைத் தேடி எடுப்பதில் அதிகக் காலம் வீணாகின்றது. நான் அங்கு இருந்தபோது M. R. சந்திரன் என்ற உதவி நூலகரைக் கொண்டு நாள் ஒன்றுக்கு 25 நூல்கள் வீதம் வகைப் படுத்திக் கொண்டு வந்தேன். சுமார் 3000 நூல்கள் இவ்வாறு வகைப்படுத்தப் பெற்றன. ஆண்டுதோறும் நூல் கள் வாங்கப்பெற்று வருகின்றன. வகைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடைபெறவில்லை. 그 口 口 டாக்டர் மு.வ.திருநாடு அலங்கரித்த(1974)நாளன்று நான் துக்கம் விசாரிக்கச் சென்னை வர முடியவில்லை. 10-ஆம் நாள் நிகழ்ச்சிக்குத்தான் வந்தேன். இரண்டு நாள் முன்ப தாக புத்துாரில் ஓர் இலக்கிய விழாவில் தலைமை வகித் தேன். அன்றே உடல்நிலை சிறிது கெட்டது; பசியில்லாத நிலை. இந்நிலையில்தான் 10-ஆம் நாள் நிகழ்ச்சிக்குச் சென்னை வந்தேன். அவர் இல்லத்தில் தேவாரம் ஒதப் பெற்றிருந்ததாக நினைவு. அவர் வானொலியில் தாயுமானவர் பற்றிப் பேசிய பேச்சு நாடாப்பதிவு செய்யப் பெற்றிருந்தது. அதை மீண்டும் கருவியில் போட்டு பலரை யும் கேட்கச் செய்தனர். பகல் விருந்து இருந்தது. பசி இல்லாததால் சிறிது மோர் உணவு, கத்தறிக்காய் கூட்டு,