பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/623

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சித்றல்கள் 589. பாயசம்-இவற்றை மட்டிலும் உண்டேன். கத்தறிக்காய்க் கூட்டு மிக நன்றாக அமைந்திருந்ததால் அதை மட்டிலும் இரண்டு கரண்டி அளவு உண்டேன், திருப்பதி திரும்பியதும் மறுநாள் தொடங்கி: வயிற்றோட்டமும் தொடங்கியது. உடல்நல மையத்தி லிருந்து (Health Centre) தருவிக்கப்பெற்ற மருந்தில் பயன் இல்லை; டாக்டர் இலட்சுமண மூர்த்தி இருமுறை இல்லம் வந்து ஊசி போட்டார். வயிற்றோட்டம் நிற்கவில்லை. பகலில் மட்டிலும் மருத்துவ மனையில் தங்க வசதி இருந்தது. ஒருவாரம் தங்கியிருந்தேன். நாடோறும் இரண்டுமுறை 250c.c. வீதம் உப்புத் தண்ணிர் உடலில் செலுத்தப் பெற்றது. வீட்டிலும் மருத்துவமனையிலும் என் மாணவர்கள் நன்கு கவனித்தனர் திரு. செல்லக்குமார் என்ற கிறித்தவ மாணவர் எனக்குச் செய்த தொண்டை நினைக்கும் போது அழுகையாக வருகின்றது இயேசு நாதரின் சீடன்போல் மகிழ்ச்சியுடன் தொண்டாற்றினார். ஒரிரண்டு நாட்கள் டாக்டர் மு. வ. வைத் தொடர்ந்து வைகுண்ட சென்று விடுவது போன்ற நம்பிக்கையும் தோன்றி விட்டது. நாளடைவில் வயிற்றுப்போக்கு அதுவாகவே நின்றது . இது உணவில் சேர்ந்த நஞ்சு என்பதை உணர்ந்து கொண்டேன். நஞ்சின் வேகம் குறைந்ததால் வயிற்றுப் போக் ம் நின்றது என்பது என் கணிப்பு. டாக்டர் ஒரு வாரம் கால்வியம் குளுகனேட் ஊசி மருந்தை தினம் ஒன்றாக ஒரு வாரம் குத்திப் புகுத்தினார். நான் படுத்த படுக்கையாக இருந்த செய்தி அதிகம் பரவவில்லை. என் வீட்டிற்கு அருகில் குடியிருந்த டாக்டர் கிருஷ்ணா ரெட்டி, டாக்டர் ஜெயராம ரெட்டி, துணைப்பதிவாளர் அஞ்சனப்பா டாக்டர் கமலநாதன், டாக்டர் ராம் பாபு சர்மா, டாக்டர் பூரீதர் சிங்க், டாக்டர் சந்திரபானு ராவுத் இவர்கள் மட்டிலுமே அடிக்கடி வந்து பார்த்துச் சென்றனர். திருமதி இலட்சுமி ஜகந்நாத ரெட்டி இருமுறை பழங்களுடன் வந்து