பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/624

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慈96 நினைவுக் குமிழிகள்.4 பார்த்து துணிவு ஊட்டிச் சென்றார், டாக்டர்.பி.ஆர். ரெட்டி (வீட்டு அறிவியல்) ஒருமுறை வந்து சென்றார். தேவ சங்கீதம், கடிகாசலம் (ஆய்வு மாணவர்கள்), டாக்டர் செளரிராசன் (விரிவுரையாளர்) அடிக்கடி வந்து கவனித்துக் கொண்டனர். டாக்டர் S. நாராயணராவ் படுக்கையாக இருந்தபோது அவரைப் பார்க்கச் சென்ற டாக்டர் D. சகந்நாத ரெட்டி படுக்கையாய்க் கிடந்த என்னைப் பார்க்க வரவில்லை. 'இவன் ஒழிந்தால் டாக்டர் தாமோதர னுக்குப் போட்டியும் ஒழியும், பேராசிரியராக்கி விடலாம்' என்று நினைத்தாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. டாக்டர் சகந்நாத ரெட்டி வரவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவரது பாரபட்சத்தைக் காட்டவே இதனை எடுத்துக் காட்டினேன், எல்லாவற்றையும் இறைவனுக்கு விட்டு விட்ட என்னைப் பார்க்க யார் வந்தால் என்ன? வாராது போயினால் என்ன? என் உடல் நிலை சீரான பின்பு பல நாட்கள் கழித்து மு. வ. வீட்டு விருந்தில் பயன்படுத்தப் பெற்ற கத்தறிக்காயில் பூச்சி மருந்து அடித்ததால் ஏற்பட்டதன் விளைவு என்ற செய்தி எட்டியது. சுமார் விருந்துண்ட 500 பேருக்கு இப்படி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையும் அறிந்தேன். அதிக மாகக் கூட்டை உண்டதால் எனக்கு அதிகத் தொல்லை ஏற்பட்டது. 口 [...] 口 டாக்டர் D. சகங்காத ரெட்டியை ஓர் இதய மருத்துவர். என்று சொல்லாம், கல்வி உலகிற்கு ஒர் இதயம் போன்றி ருக்கும் பல்கலைக் கழகத்தின் தூய்மையைக் காத்தவர். அதன் சுற்றுப்புறச் சூழ்நிலையையும் கட்டடத்தின் உட்புறச் சூழ்நிலையையும் பேணிக் காத்தவர். சில சமயம் அவர் ஏறவும் -இறங்கவும் பயன்படுத்தப் பெறும் மின் பொறியைப் (Electric Lift) பயன்படுத்தாமல் கால் நடை யாகவே ஏறுவார். தாம் செல்லும் வழியில் (கட்டடத்திற் குள்) ஒரு சிறு காகிதத் துண்டு கிடந்தாலும் அதைக்