பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/626

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密92 - நினைவுக் குமிழிகள்-2 இராமலிங்கத்தின் திருமணம் வேலூரிலும், இளையமகன் டாக்டர் இராமகிருஷ்ணனின் திருமணம் 1977 ஜூனில் திருச்சியிலும் நடை பெற்றது. இவற்றையொட்டி திருப்பதி: யில் 700 பேருக்கு என்று திட்டம் போட்டு வரவேற்பு நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். இரண்டிற்கும் துணைவேந்தர் டாக்டர் K. சச்சிதானந்த, மூர்த்தியும் பதிவாளர் டாக்டர் கேசவமூர்த்தியும் வரவில்லை. எங்கேயோ இருந்து வந்த தமிழ்ப் பேராசிரியர் விட்டு நிகழ்ச்சிக்குப்போனால் என்ன? போகாவிட்டால் என்ன? என்று நினைத்துக் கொண்டுவராதிருந்த விட்டார் கள். துணைவேந்தர் D. சகங்காதரெட்டியும் பதிவாளர் திரு. M. K. இராமகிருஷ்ணனும் பதவியில் இருந்திருப்பார்களே யாயின் கட்டாயம் வந்திருப்பர். திரு. S. A. அனந்தசயனம். ஐய்யங்காரும் என் அருமை நண்பர் அரங்கசாமி ஐய்யர் (இலால் குடி தலைமையாசிரியர்) கூட மகன் வீட்டிலிருந்த தால் மருமகளுடன் வந்து சிறப்பித்தார். திரு. அனந்தசயனம் ஐய்யங்கார் சுமார் 14 மணிநேரம் தங்கிப் பேசிக் கொண்டிருந்ததை இன்னும் என் நினைவில் பசுமை, யாகவுள்ளது. நூலக அன்பர்கள் திரளாக வந்திருந்தனர். பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் கூட வரவில்லை. முதல்வர் அலுவலகத்திலிருந்து K. சந்திரசேகரும். சஞ்சீவிநாயுடும் வந்து சிறப்பித்தனர். சிற்றுண்டி அதிகமாக மிஞ்சிவிட்டது. பொட்டலங்கள் கட்டி அக்கம் பக்கத்தி லுள்ள முப்பது வீடுகட்கு அனுப்பிவைத்தேன். காஃபி கெடாமலிருந்ததால் மறுநாள் காலை விறகு பொருக்க வருபவர்கள். பால்காரர்கள், பல கடை நிலை ஊழியர். கள் (தோட்டிகள்) இவர்கட்கெல்லாம் வழங்கி விட்டேன். வீட்டில் இடமில்லாததால் கொட்டகை போட்டு: மின்விளக்கு அமைப்புடன் ஏற்பாடு செய்திருந்தேன். வீட்டில் வாழை மரங்கள் தோப்பாக வளர்ந்திருந்ததால் அவற்றை வெட்டிக் கொட்டகையில் கட்டினேன், நிகழ்ச்சி: சிறப்பாகவே அமைந்து விட்டது: