பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/627

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 593 நான் குடியிருந்த புது வீட்டில் வீட்டிற்குள் ஒருமுற்றம் இருந்தது. அது சிமிட்டித் தரையாக்கப் பெறாமல் இருந்தது. அதைச் சிமிட்டித்தரையாக்கினால் திருமண வரவேற்புக்கு வசதியாக இருக்கும் என்று பல்கலைக் கழகப் பொறியாளர் திரு. சந்திரமெளளிரெட்டிக்கு எழுதிக் கேட்டேன். அதற்கு நிதி இல்லை என்று கையைவிரித்தார். பக்கத்தில் குடியிருக்கும் டாக்டர் கமலநாதன் வீட்டிலும் துணைப்பதிவாளர் அஞ்சனப்பா வீட்டிலும் போடப் பட்டுள்ளதே! இவற்றிற்கு மட்டிலும் நிதி எப்படி வந்தது? என்று கேட்டதற்கு அவை மேல் மட்ட விஷயம்' என்றார்: என் செலவில் போட ஒப்பினால் உடனே செய்து தருவதாக வாக்களித்தார். அப்படிச் செய்யுமாறு கடிதமும் எழுதினேன். இரண்டே நாட்களில் வேலையை முடித்துத் தந்தார்; ரூ350 -க்குப் பில்லும் வந்தது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்தில் துணை வேந்தரைச் சந்தித்து என் செலவில் போட்ப்பெற்ற சிமிட்டிதரைக்கான செலவு குறித்துப் பேசினேன். 'இன்னும் மூன்று மாதத்தில் ஒய்வு பெறும் நான் இந்த பில்லைக் கட்டவேண்டுமா?" என்று கேட்டதற்கு 'பில்லை இணைத்துப் பதிவாளருக்குக் கடிதம் எழுதுங் கள்' என்றார். . அவ்வாறு செய்து இந்தச் செலவைத் தவிர்த்தேன். 口 门 口 இராமலிங்கத்திற்குத் திருமணம் ஆகி மூன்று மாதத் தில் வீட்டில் ஒரு களவு நிகழ்ந்தது. இராமலிங்கமும் அவன் மனைவியும் சாளரத்தின் ஒரத்தில் படுத்திருந்தனர். சாளரத்தைச் சுற்றிலும் முக்கால் அடி மறைப்புச் சுவர் இருந்தது; ஆள் ஏறி சாளரத்தில் உட்கார்ந்து கொண்டால் தெருவில் போவாருக்கு ஆள் உட்கார்ந்திருப்பது தெரியாது.வீடுகளும் ஊரைத்தாண்டி 2 மைல் தொலைவில் கட்டப் பெற்றிருந்ததால் ஆளரவம் அதிகம் இருப்பதில்லை: திருடுகிறவர்கட்குச் சரியான வாய்ப்பு. யாரோ இரவு நி-38