பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/628

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59奎 நினைவுக் குமிழிகள்-4 இரண்டு மணிக்கு வந்து சாளரத்தில் ஏறிப்பார்த்திருக்க வேண்டும். பையன் சாளரத்தின் ஒரத்தில் படுத்திருந் தான்; பயனில்லை என்று கள்வன் போய்விட்டான். மூன்று மணிக்கு வந்து பார்த்தபோது மருமகள் சாளரத் தின் ஒரத்தில் படுத்திருக்க கண்டு தாலித் சங்கிலியை (10 சவரன்) அறுத்துக் கொண்டு போய்விட்டான். போலிசில் புகார் செய்தேன்; வந்து பார்க்கக்கூட இல்லை. துணைவேந்தர், பதிவாளரைப் போலீசுக்கு தொலைபேசி மூலம் பேசச் சொன்னேன்: பேச மறுத்து விட்டனர். பல்களைக் கழக வீடுகளில் குடியிருந்ததால் இதைச் செய் திருக்கலாம்: செய்யவில்லை. என்ன செய்வது? பல்கலைக் கழக நிர்வாகம் அப்படி. பின்புறமும் முன்புறமும் உள்ள கதவுகளில் கள்ளன் தாழ்ப்பாள் போட்டுவிட்டால் வீட்டை விட்டு வெளியில் வந்து பிறர் உதவியை நாடவும் முடிய வில்லை. இது ஒருவகை அநுபவம் 峦 口 [] இரகுபதி என்பவர் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 4 ஆண்டுகள் பணி புரிந்தார். துணைவேந்தர் தயவால் வந்தவர், என் உதவியும் சிறிது இருந்தது. சி ஆண்டுகட்குப் பிறகு அவர் மனக் கோளாறு அடைந்தார். வகுப்பு எடுப்ப தில்லை. பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒராண்டு பொறுத்துப் பார்த்தேன். பல்கலைக் கழகத்திற்கு எழுதி அவரை விலக்கச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் பிறகு ஒன்றரை ஆண்டுக் காலம் அவர் இடத்திற்கு ஆளே போடிவில்லை. எத்தனையோ கடிதங்கள் எழுதியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வேலையை தேவசங்கீதம் என்ற ஓர் ஆராய்ச்சி மாணவருக்குத்தந் தேன். மாணாக்கர்கள் தேர்வு எழுத வேண்டியவர்கள் அல்லவா? தேவசங்கீதத்திற்கு பல்கலைக் கழக மானிய ஆணையம் ரூ 750 படிப்புதவி அளித்தது. ஆயினும் ஓராண்டு வகுப்பு வேலை செய்ததால் அவரது ஆய்வுப்