பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினைவுச் சிதறல்கள் 葛95 பணி கெட்டது. சுணங்கியது. ஒர் ஆண்டுகள் கழிந்ததும் குறிப்பிட்ட காலத்தில் பிஎச்.டி. ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க முடியவில்லை. படிப்புதவி பெறாத ஆய்வு மாணவர்கள் வகுப்பு வேலை செய்ய நேரிட்டர்ல் வாரம் ரூ. 50/- அனுமதிக்கலாம் என்று சுற்றறிக்கை ஒன்று பல்கலைக் கழகத்திலிருந்து வந்திருந்தது. அதைப் பயன் படுத்திக் கொண்டு ஆறுமாதம் வகுப்பு வேலை (எந்தப் படிப்புதவியும் இல்லாமல்) செய்த தேவசங்கீதத்திற்கு ரூ 1200/- வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதினேன், சுமார் 1; ஆண்டு வகுப்புப் பணி செய்ததில் ஓராண்டு பல்கலைக்கழக மானிய ஆணையம் படிப்புதவி பெற்ற தனால் அந்தக் காலப் பகுதிக்குக் கேட்கவில்லையென்றும் பல கடிதங்கள் பதிவாளருக்கு எழுதியும் விரிவுரையாளரை நியமனம் செய்யாததால் இந்நிலை எழுந்தது என்றும், தேர்வுக்குப் போகும் மாணவர்களின் நலனைக் கருதி இந்த ஏற்பாடு செய்ய வேண்டி நேரிட்டது என்றும் விளக்கி எழுதினேன். - பல்கலைக் கழக அனுமதி இல்லாமல் தேவசங்கீதத் திற்கு வேலை தந்ததற்குத் தக்க சமாதானம் கேட்டுக் கடிதம் வந்தது. 14 ஆண்டுகளாக விரிவுரையாளர் நியமனம் செய்யுமாறு கேட்டு எழுதியும் பல்கலைக் கழகம் தக்க நடவடிக்கை எடுக்காததாலும்,மாணவர்கள் தேர்வுக் குப் போக வேண்டியிருந்ததாலும், தேவசங்கீதத்திற்கு ரூ 750/- படிப்பூதியம் கிடைத்து வந்ததாலும், படிப்புதவி இல்லாதவர்கள் வகுப்பு வேலை செய்யும் சுற்றறிக்கை -யைப் பார்க்க நேரிடவில்லை என்றும், அவர் கட்டுரை சமர்ப்பிப்பதில் ஆறுமாதம் தாமதம் ஏற்பட்டதால் அக்காலப் பகுதிக்கு மட்டிலும் கேட்டு எழுதியதாகவும், கட்டுரை சமர்ப்பித்த பிறகு இச்சுற்றறிக்கையைப் பார்க்க நேரிட்டது என்றும், இதன் காரணமாகத்தான் சுற்ற றிக்கையின் பலனை அவனை அனுபவிக்கச் செய்யலாம் என்று எழுதியதாகவும். அதற்காக காலத்தில் எழுதாத