பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதியில் திருத்தலப் பயணிகள் 23 குலந்தான் எத்தனையும் பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன் நலந்தான் ஒன்றுமிலேன: நல்லதோரறஞ் செய்து மிலேன் தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன் பெரியேன் ஆயினபின் பிறர்க்கேயுழைத் தேழையானேன் என்று கதறிக் கதறியழுது, கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா! ஆற்றேன் வந்தடைந்தேன்; ஆடியேனை யாட் கொண்டருளே." என்று அவன் அருளை வேண்டுவேன். இன்னது வேண்டு மென்று ஒருநாளும் அவனைக் கேட்டதில்லை. எனக்கு எது வேண்டும்? என்பதை அவன் அறிந்து கொடுப்பான் என்று வாளா இருந்து விடுவேன். வந்தாய்; என்மனம் புகுந்தாய்; மன்னிநின்றாய். நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ! சிந்தா மணியே! திருவேங் கடம்மேய எந்தாய்! இனியா னுன்னை என்றுவிடேனே" 1. துறையூர் ஜமீந்தார் உயர்நிலைப்பள்ளியில் பணி யாற்றியபோது பள்ளிமேம்பாட்டிற்காக உயிரை விட்டு உழைத்தேன்; மாணாக்கர் நலனுக்காக மனமாரப் பணி யாற்றினேன். ஜமீந்தார் சொந்த நலனுக்கு உழைத்து ஏழையானேன். மாதந்தோறும் குருதியை உறிஞ்சிக் கொண்டிருந்தார்; இப்பாசுரத்தைச் சேவிக்கும்போது இந்நிகழ்ச்சி நினைவிற்கு வரும். வழக்கு தொடுத்தேன். நீதி மன்றத்தில் ஏழைக்கு எப்படி நீதி கிடைக்கும்? 2. பெரி. திரு. 1. 9: 1, 3, 4, 7. 3. டிெ . 10:9