பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 நினைவுக் குமிழிகள்-2 இந்த தவறுதலைப் பொறுத்து மாணவனுக்கு உதவ: வேண்டும் என்றும், அப்படி உதவப் பல்கலைக் கழகம், முன்வராவிட்டால் தாம் செய்த பணி மாணவர் நலனுக்குக் காகச் செய்த தியாகமாக மாணவர் கருதுவதாகவும்: பணிவாக ஒரு கடிதம் எழுதினேன். என்னுடைய உளளம் துய்மையாக இருந்ததாலும், மாணவனும் தன் பணியைத் தியாகமாகக் கருதும் படி கூறியதாலும் இறைவன் அருள் செய்தான்; பல்கலைக் கழகமும் ரூ 4200/- தேவ சங்கீதம், பேருக்குக் காசோலை அனுப்பி உதவியது. இப்படி யெல்லாம் மாணாக்கர் நலனுக்கு உழைத்ததை நினைக்கும். போது என் மனம் பூரிக்கின்றது. 工 亚 口 தமிழ்த்துறை இருந்தும் வகுப்புகளைத் தவிர வெளி யில் தமிழ் ஒலிகளைக் கேட்கும் வாய்ப்பில்லை; ஏற்கெனே தமிழ்த் தாய் வாழ்த்து பற்றிய இசைத் தட்டு வாங்கி எல்லாக் கூட்டங்களிலும் அதை முதலில் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தியிருந்தேன். இசைத் தட்டுகள் போடும் கருவியொன்றும் துறைக்கு வாங்க வேண்டும். என்று என் மனம் கருதியது. பணம் வேண்டுமே. யோசித்துக் கொண்டிருக்கையில் பொய்யா மொழி' ஆசிரியர் A. ஆதிமூலத்தின் நினைவு வந்தது. இவர் பி.ஏ., எம். ஏ. அஞ்சல் வழிக் கல்வி மூலம் பெறுவதற்கு அவ்வப்போது சிறிது உதவினோம். இவரது திருமகன் மேட்ரிக் தனியாகப் படிக்கும் போது தேர்வுச் சமயத்தில் ஒரு மாதம் என் இல்லத்தில் தங்கிப் படித்தான்; என் பிள்ளை போல் உண்டி உறையுள் தந்து உதவினேன். திரு. ஆதிமூலம் தெய்வ சிந்தனையுள்ளவர். இயலும் வகைகளிலெல்லாம் பிறருக்கு உதவும் பண்பினர். செல்வச் செழிப்பிற்கும் குறைவில்லாதவர். நாளிதழ்களின் ஏஜண்டாகவுள்ள பணியிலும் நல்ல வருவாய் வந்து கொண்டிருந்தது. சென்னையில் ஏதோ வேலையாக வந்திருந்தபோது இசைத்தட்டு போடும் கருவி (Record. Player) ஒன்று துறைக்கு வேண்டும். யாராவது: