பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 597 தன்கொடை தந்தால் வாங்கலாம். யாரைக் கேட்பது என்ற ஐயத்தால் தயங்கிக் கொண்டிருக்கின்றேன்’ என்றேன். உடனே அவர் என்னை அவர் காரிலேயே இட்டுச் சென்று ( ரூ 525/-விலை என்பதாக நினைவு) கருவியொன்றையும் சில நல்ல, இசைத்தட்டுக்களையும் வாங்கித் தந்து என்னை மகிழ்வித்தார். துறையினரிடையே யும் மகிழ்ச்சி பொங்கக் காரணமாயிருந்தார். திருப்பாவை, திருவெம்பாவை, வெண்ணிற்றுப் பதிகம், போன்ற இசைத் தட்டுகளை துறைக்கென்று சேமித்து வைத் துள்ளேன். துறையில் சில முக்கிய நிகழ்ச்சிகள் நடை பெறும்போது இவற்றைப் பயன்படுத்தி வந்தேன். ロ 口 Q முதுகலை வகுப்பு தொடங்கப் பெறுவதற்கு முன் விரிவுரையாளர் பதவிக்கு மட்டிலும் பணம் ஒதுக்கப் பெற்றிருந்தது. இந்த வகுப்பு தொடங்கப் பெற்றபோது பேராசிரியர்-1, துணைப் பேராசிரியர்-1, விரிவுரை யாளர்-1 என்ற பதவிகட்குப் பணம் ஒதுக்கப் பெற்றது. தொடக்கக் காலத்தில் இரண்டு துணைப் பேராசிரியர்கள் நியமனம் பெற்றனர். மூன்றாவதாக ஒரு விரிவுரையாளர் (திரு. P. செளரிராசன்) நியமனம் பெற்றார் (சனவரி1971). அடுத்து, சூன் சூலையில் (1971) இன்னொரு விரிவுரையாளரும் (T.T. இரகுபதி) நியமனம் பெற்றார். இன்னொரு விரிவுரையாளர் பதவிக்கும் பல தடவை பல்கலைக் கழகத்திற்கு எழுதி இசைவு பெற்றேன். இப்போது துறைக்கென்று ஐந்து பேருக்கு வாய்ப்பு இருந்தது. பேராசிரியர் பதவிக்குரிய தொகையைக் குறைத் து அதை விரிவுரையாளர் பதவியாக்கினார் டாக்டர் ரெட்டி; அவர் காலத்தில் 'தமிழ்ப்பேராசிரியர்' பதவி யாருக்கும் தரப்போவதில்லை என்பதைத் தெளிவாக்கினார் துணைவேந்தர் டாக்டர் D. சகந்நாத ரெட்டி. தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் இவர். தன்னை ஆந்திரர் என்று காட்டிக் கொண்டு இருந்தவர். அடுத்து துணை வேந்தராக வந்த பேராசிரியர்