பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/632

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 நினைவுக் குமிமிகள்.4 IK. சச்சிதானந்த மூர்த்தி என்பவர்-இவர் ஆந்திரர்பேராசிரியர் பதவிக்குப் பணம் ஒதுக்கீடு செய்து பேராசிரியர் பதவியையும் நிரப்பியவர். பேராசிரியர் இல்லாத துறையே இருத்தல் கூடாது என்று திட்டம் போட்டு செயற்படுத்தின. பெருமகன் இவர். மனிதருக்கு மனிதர் கொள்கைகளிலும் உயர் நோக்கங்களிலும் செயற். ப்டுவதிலும் வேறுபடுகின்றார்கள். டாக்டர் D. சகந்நாத ரெட்டியின் செயலை நோக்குமிடத்து அவர் சாதி அடிப் படையில் செயற்பட்டார் என்று கருதுபவர்க்கு அவர் ஒரு விநோதமான மனிதர் என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஆந்திரரெட்டிகளில் டாக்டர் ஜெயராமரெட்டியின் மீது காட்டிய பரிவு வேறு ரெட்டிகளிடம் காட்டவில்லை. தமிழர்களில் (இருவர் தாம் இருந்தனர்) திரு T, J. இரகுபதியிடம் காட்டிய பரிவு (அவர் சொந்தவூருக்கு. அருகிலுள்ள சிற்றுாரைச் சேர்ந்தவர்) என்னிடம் காட்ட வில்லை; மாறாக, நீங்கு செய்யாவிடினும், நன்மை செய்ய வில்லை; செய்யவும் நினைக்கவில்லை. ஆனால் சாதிக் கொள்கைக்கு அப்பாற்பட்டவன் நான்; இதனால் அவர் எது செய்தாலும் நான் சாதி அடிப்படையில் அதைநோக்கு வதில்லை. வேறொரு சாதியியைச் சேர்ந்தவர் மிகத் திறமையினராக இருக்கும்போது தம் சாதியினரைச் சார்ந் தவர் ஒருவர் அவரை விடக்குறைவான திறமையுள்ளவரை ஒரு பதவியில் அமர்த்துதல், விதிகளை வளைத்து நியாயப் படுத்திக் காட்டல், கொலைக்குற்றம் புரிபவரை விடக் கொடுமையானவர் என்பது என் கருத்து, ü 口 叱 பெரியபதவியிலிருப்பவர்கள். ஆணவத்தால், தவறான முடிவு எடுக்கும்போது, குழப்பமும் கொந்தளிப்பும் எழும். துன்பப்படுபவர்கள் போர்க் கொடி எழுப்புவார்கள். இன்று கல்விக் கூடங்களில் ஏற்படும் குழப்பத்திற்கு உயர் பதயிலிருப்பவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளே