பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 599 காரணமாகும். மாணவர்கள் மனமுதிர்ச்சியின்மையால் சில செயல்களைப் புரிந்தாலும் அவர்களிடம் பரிவுடன் பேசித் திருத்தலாம்; அவர்களை ஐயக்கண் கொண்டு பார்த்தல் ஆகாது. அவர்களை அணுகுவதில் தந்தைதனயன் பாசம் வேண்டும். ஒரு சமயம் தேர்தல் சமயத்தில் மாணவர்கள் தேர்வுகளை ஒரு மாதம் தள்ளி வைக்கும் படி பல்கலைக் கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். துணைவேந்தர் டாக்டர் ரெட்டி பரிவுடன்தான் செயற் பட்டார்: ஆட்சிக்குழுக் கூட்டத்தில் வைத்து தேர்வை 3 வாரம் தள்ளி வைக்க அனுமதி பெற்றார். கூட்டம் முடிந்து துணைவேந்தர் தம் அறைக்குத் திரும்பியதும் பத்துப் பன்னிரண்டு மாணவர்கள் துணைவேந்தரைப் பார்த்து முடிவு தெரிந்து கொள்ளக் காத்திருந்தனர்: அவரையும் பார்த்தனர். நான் ஆட்சிக் குழுவினரைச் சரிப்படுத்தி உங்கள் கோரிக்கையை நிறைவேறச் செய் தேன். நீங்கள் கவலைப்படவேண்டாம், அறைக்குத் திரும்பி நன்றாகப் படியுங்கள். மாணவர்கட்குத் தானே பல்கலைக் கழகம் உள்ளது? என்னால் இயன்ற வரை உங்கட்கு வேண்டிய நன்மைகளைச் செய்வேன்' என்று அன்பாகப் பேசி ஆறுதல் கூறி அனுப்பியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. சீறினார்; சினந்தார். கண்ணோட்டம் சிறிதுமின்றி நடந்து கொண்டார். தன்னைத்தான் காக்கின் சினங் காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்" (குறள்-305) என்ற வள்ளுவர் வாக்கை அறியாது செயற் பட்டார். சினம் பலிக்குமிடத்தில் காத்துக் கொள்பவரே சினம் காப்பவர். இது அருளுடையவர் செயல். பாரதியாரும்,