பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/634

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ 0 0 நினைவுக் குமிழிக்ள்.4 சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவார் ஒப்பாவார்; சினங்கொள்வார்தாம் மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய வாள்கொண்டு கிழித்திடுவார்; மானு வாரா? என்று சொல்லியுள்ளார். சினங்கொள்ளும் போது குருதியும் கொதிக்கும்; இதைக் கூட மருத்துவ நிபுண ராகிய டாக்டர் ரெட்டி அறியவில்லையே. கூட்டத்தைச் சமாளிப்பதற்கு உளவியல் உண்மை தெரிந்திருக்க வேண்டும். பொறுமையுடன் பேசினால் படமெடுத்தாடும் நாகப்பாம்பு வேருக்கு முன் பணிவதுபோல் சீறியெழும் மாணவர்கள் பணிந்து விடுவார்கள். ஆனால் டாக்டர் ரெட்டி என்ன செய்தார்: "நீங்கள் உங்கள் தாடி வளர்ந்து நரை காணும் வரையிலும் போராடினாலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது; என்னை ஒர் அங்குலம் கூட உங்களால் நகர்த்தமுடியாது; பணிய வைக்க முடியாது . வெளியே நடங்கள்' என்றார். மாணவர்கள் கீழே இறங்கி ஒடி வந்தார்கள், வாயில்படியில் நின்ற் காரை நொறுக்கி நொங்க வைத்தார்கள். பெட்ரோலைத் திறந்து விட்டுக் காரை கொளுத்த நினைத்தார்கள். ஒருவர் கையிலும் தீப்பெட்டி இல்லை. அதற்குள் பல்கலைக் கழகச் சிப்பந்திகளில் சிலர் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டார்கள். இதற்குள் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்ட செய்தியும் பரவியது: கொந்தளிப்பும் அடங்கியது. கட்டில் வேண்டுமென்று மாணாக்கர்கள் வேலை நிறுத்தம் தொடங்க நினைத்தபோது டாக்டர் W.C. வாமன் ராவ் சமாளித்ததை நேரில் கண்டேன். டாக்டர் சகங்காத ரெட்டி முடிவு எடுத்த பிறகும் அதைச் சொல்லாமல் சீறி எழுந்ததையும் கண்டேன். கடுமையாக உழைத்தால் மட்டிலும் போதாது; மனிதருக்கு இங்கிதமும் வேண்டும். 3. பாகவ : சுயசரிதை (பாரதி அறுபத்தாறு-8)