பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/635

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வேமனர்"உதயமும் என் பதவி உயர்வும் 60 } ஆணவமலம் செயற்படத் தொடங்கினால் அறிவு செயற் படுவதை அது மறைத்து விடும் என்ற சிந்தாந்த உண்மையை நினைத்துக் கொண்டேன். குமிழி-230 74. 'வேமனர் உதயமும் என் பதவி உயர்வும் 1976. sa ஆண்டு என நினைக்கின்றேன். சென்னையிலுள்ள சாகித்திய அக்காதெமியிலிருந்து ஒரு வேண்டுகோள் வந்தது-திரு.வி. ஆர். நார்லா எழுதிய வேமனர் என்ற சிறு ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று ஒப்புக் கொண்டேன். பல்வேறு பணி களில் ஈடுபட்டிருந்தாலும் இப்பணியை ஒரு தெய்வப் பணியாக ஏற்றுக் கொண்டேன். இதற்குக் காரணம் என்ன? வேமனர் தெலுங்கு மொழியில் ஒரு மாபெருங்கவிஞர்: மக்கட் கவிஞர். இவரைப்பற்றித் தமிழ்ப் பெருமக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு தருவதற்கு ஒரு கருவியாகப் பயன்படப் போகின்றேன் என்ற ஒரு பெருமித உணர்ச்சி என்பால் எழுந்தது; எக்களிப்பும் தோன்றி +Liġi!. இதுகாறும் உயிரியலில் (மானிட உடல்) ஒன்றும் இயற்பியலில் (அணுக்கரு பெளதிகம்) ஒன்று மாக இரண்டு அறிவியல் நூல்களை மொழிபெயர்த் துள்ளேன். தவிர, அறிவியல் பயிற்றலில் (யுனெஸ்கோ: அறிவியல் பயிற்றும் மூல முதல் நூல்) ஒன்றையும் மொழி பெயர்த்துள்ளேன்; இவை மூன்றும் தமிழ்ப்பெரு மக்களின் பாராட்டைப் பெற்றன; இரண்டாவதாகக் குறிப்பிட்ட நூல் சென்னைப் பல்கலைக் கழகப் பரிசையும் பெற்றது.