பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/636

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

参毅婆 நினைவுக் குமிழிகள்.கி இலக்கியத்திலும் அதுவும் பிறமொழியிலிருந்து, தமிழுக்கு. வரும் ஓர் இலக்கியத்தைப் பற்றிய ஒர் அறிமுகம் செய்யும் அளவில் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரும் பேறாகக் கருதி வேமனர் நூலை மொழி பெயர்க்க ஒப்புக் கொண்டேன். ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் சிறிது சிறிதாகச் செய்து தமிழாக்கப் பணியை ஒருவாறு, நிறைவேற்றினேன். இந்தத் தமிழாக்கப் பணியைச் செய்யும் போது என்னுடைய பிஎச். டி. ஆய்வு நூல் (இஃது ஒரு பெரு. நூல் - அச்சில் சுமார் 950 பக்கங் கொண்டது) அச்சாகி வந்தது. நாடோறும் பார்வைப் படிகளைச் சரி பார்க்க வேண்டும்; உடனுக்குடன் பல்கலைக்கழக அச்சகத்தில் சேர்க்க வேண்டும். இரண்டு பிஎச், டி. ஆய்வு மாணாக் கர்கள் கட்டுரைகளைப் பல்கலைக் கழகத்திற்குத் தர வேண்டிய காலகட்டங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. அவர்களுடைய கட்டுரைகளைத் (ஆங்கிலத்தில் எழுதப் பெற்றவை) தட்டச்சுக்குப் போவதற்குமுன் வரி வரியாகப் பார்த்துச் செய்ய வேண்டிய பணி இருந்து வந்தது. முதல் முறை தட்டச்சு செய்தவற்றையும் சரி பார்த்துப் பச்சைக் கொடி காட்டும் பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தேன். ஒருவர் ஒருவாறாக முடித்துத்தரும் நிலைக்கு வந்து விட்டார். இறுதியில் தந்து பட்டமும் பெற்றுக் கொண்டார். மற்றொருவர் வேகமாக எழுதித் தட்டச்சு செய்துகொண்டிருந்தார். இதைச் சரிபார்க்க வேண்டும் சில மாதங்கள் வீட்டில் இரவு கண் விழித்துச் செய்ய வேண்டி யிருந்தது. இன்னொரு எம், ஃபில் கட்டுரையையும் சரி பார்க்க வேண்டியருந்தது. இதுவும் ஆங்கிலத்தில் எழுதப் பெற்ற கட்டுரை. ஏதோ என்னுடைய அறிவுக் கெட்டிய படி பிஎச், டி. எம். ஃபில் கட்டுரைகளை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்றும் இவற்றுக்குரிய எழுத்துத் தேர்வுகளையும் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற மரபையும் ஏற்படுத்தியிருந்ததால் மாணாக்கர்களும் கடின