பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/637

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வேமனர் உதயமும் என்பதவி உயர்வும் 6:0; உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருந்தது; எனக்கும். அதிகமான வேலை குவிந்தது. சாகித்திய அக்காதெமிக்கு வேமனரின் தமிழாக்கத்தில் இரண்டு படிகள் தர வேண்டும். திருப்பதியில் தமிழ் தட்டச்சு செய்ய வாய்ப்பும் வசதியும் இல்லை. என் சொந்தப் பணியை - அது எந்த விதமான பணியாக இருந் தாலும் - என் மாணாக்கர்ட்ைகு இடுவதில்லை. தாங்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டு விட்டதால் ஃபூலஸ் கேப் அளவு தாளில் உள்ள 220 பக்கங்களை ஏழெட்டு: மாணாக்கர்களிடம் பிரித்துத் தந்து படி எடுக்கச் சொன்னேன். சாகித்திய அக்காதெமியிலிருந்து தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்கள் வந்த வண்ணம் இருந்ததால் இவ்வாறு மாணாக்கர்களிடம் இப்பணியை ஒப்படைக்க வேண்டியிருந்தது. பிறகு இவ்வாறு பலரால் படியெடுக்கப்பட்டதை தலையாய ர்ை ஆய்வு மாணாக்கரை வைத்துக் கொண்டு நானே சரி பார்த்தேன்.படியெடுத்தல் பணியை ஒருவர் கூடச் சரியாகச் செய்யவில்லை என்பதை அறிய முடிந்தது. ஒற்றுப் பிழைகள், வரிகளைவிட்டெழுது தல், சொற்கள் சொற்றொடர்களை விட்டெழுதுதல். நிறுத்தற்குறிகளைக் கவனி யாதெழுதுதல் போன்ற பல்வேறு பிழைகள் மலிந்திருந்தன. இவற்றையெல்லாம் திருத்தி கைப்படிகளைச் சாகித்திய அக்காதெமிக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் நூல் உடனே வெளிவர வில்லை. , ஆமை வேகத்தில் அச்சு வேலை நடைபெற்றது : நத்தை வேத்தில் பார்வைப் படிகள் வந்தன. நான் திருத்தித் திருத்தியனுப்பிய பார்வைப் படிகள் விரைவு வண்டி வேகத்தில் சென்றன; ஆனால் நூல் நான் ஒய்வு பெற்றுச் சென்னையில் குடியேறிய பின்னர்தான் வெளி வந்தது (1978) இஃது என்னுடைய முப்பது மூன்றாவது வெளியீடு. இந்தக்கால கட்டத்தில் இன்னொரு முக்கிய நெருக்கடி நிலை-இஃது என் வாழ்வு பற்றியது