பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夺04” நினைவுக் குமிழிகள்.4 ஏற்பட்டது, துணைவேந்தர் டி. சகங்காத ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் (1969-75) கொடுக்காமல் தேக்கி வைக்கப் பெற்றிருந்த பதவி உயர்வு(அதாவது பேராசிரியர் பதவி) துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கே. சச்சிதா கந்த மூர்த்தி காலத்தில் எனக்குக் கிடைக்கக்கூடிய ஊழ் ஏற்பட்டது. நான் ஒய்வு பெறுவதற்கு இன்னும் ஒராண்டுக் காலமே இருந்ததையும், என்னுடைய சுறுசுறுப்பாக இயங்கும் பண்பையும், கடுமையாக உழைக்கும் ஆற்றலை யும், சுமார் நாற்பதிற்கு மேற்பட்ட வெளியிடுகளையும் நேரில் நன்கு கண்டு தெளிந்த பேரர்சிரியர் மூர்த்தி அவர்கள், பல்வேறு பதவிகட்கு விளப்பரம் செய்யும்போது தமிழ்ப் பேராசிரியர் பதவியையும் விளம்பரத்தில் சேர்த்து விளம்பரம் செய்தார். எல்லாத்துறைகட்கும் பேட்டிகள் நடைபெற்றன; தமிழ்த் துறைக்கும் பேட்டி நடை பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர், டாக்டர் N சஞ்சீவியும், மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் முத்து சண்முகமும் நியமன நிபுணர்க்குழுவில் இடம் பெற்றிருந்தனர். நானும் டாக்டர் தாமோதரனும் விண்ணப்பித்திருந்தோம். வேறு விண்ணப்பங்கள் வரவில்லை. எனக்கு எம். ஏ. கற்பித்தலில் பத்து ஆண்டுகள் இல்லாததால் எனக்கு இப்பதவி கிடைக்கக் கூடாது என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவர் இப்போது என்ன என்ன வெல்லாம் செய்து கொண்டிருப்பார் என்பதை நான் விளக்க வேண்டியதில்லை. வாசகரே ஊகித்துக் கொள்ள வேண்டியது. கொடுக்கிற தெய்வம் இருந்தால் அது கூரையைப் பொத்துக் கொண்டு கொடுக்கும் என்பது மக்களிடையே வழங்கும் ஒரு பழமொழி. பேராசிரிய பதவி விளம்பரம் செய்யப் பெற்றதே எனக்குக் கிடைப்பதற்கான அறிகுறி’ என்பது எல்லோர் கருத்திலும் பட்டது. இப்போது,