பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வேமனர் உதயமும் என்பதவி உயர்வும் 695 பெய்யு மாரியால் பெருகு வெள்ளம்போம் மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல் "ஐயநின்மகற்கு அளவில் விஞ்சைவந்து எய்து காலமின்று எதிர்ந்த நரம் என்றான். ' என்ற கம்பராமாயணப்பாடல் நினைவுக்கு வருகின்றது. இது வசிட்டர் 'இராமனை விசுவாமித்திரருடன் அனுப்புக’ என்றலைத் தெரிவிப்பது . அரசனே! பெய் கின்ற மழையினால் பெருகுகின்ற வெள்ளங்கள் சென்று. கடலில் விரைந்து சேருவது போல், இராமனுக்கு அளவில் லாத வித்தைகள் வந்து சேரும்படியான தற்காலம் இன்று நேர்ந்ததாகும்’ என்கின்றார். எனக்கு இந்தப்பதவி வருகின்ற காலம் எய்துகின்றதால்தான் இது விளம்பரப் படுத்தப் பெற்றுள்ளது என்று நினைத்தேன். டாக்டர் கு. தாமோதரன் பகீரதப் பிரயத்தனங்கள் செய்தார். துணைவேந்தர், பதிவாளர், முதல்வர், டீன் இவர்களை எல்லாம் பார்த்துப் பேசினார், என்னைப்பற்றி அபாண்டமாகப் புறங்கூறி மகிழ்ந்தார். விண்ணப்பம் போட்டதைத் தவிர நான் எந்த முயற்சியும் செய்ய வில்லை. வேங்கடவாணனின் அருள் இருந்தால் கிடைக் கட்டும்' என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு வாளா இருந்து விட்டேன். பேட்டியும் முடிந்தது. பேட்டி முடிந்ததும் குழு கலந்தாயும் போது கடுமையாக வாதங்கள் இருந்தனவாம். டாக்டர் சஞ்சீவி, நானும் டாக்டர் ரெட்டியாரும் (அப்போது இருவருக்குகே டாக்டர். டட்டம் இல்லை) 1960-இல் சென்னைப் பல்தலைத்துமுகத் திற்கு விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தோம் என்னைவிட அநுபவம் மிக்கவராகவும், பலதரமான நூல் களின் ஆசிரியராகவும் இருந்தார்: வயதிலும் முதிர்ந்தவு ராக இருந்தார். தவிர, அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியர் (Professor) பதவியிலும் இருந் 1 . கம்ப, பாலகா, கையடை-15