பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密66 நினைவுக் குமிழிகள்-4 தார். இத்தகுதிகள் எல்லாம் எனக்கு இல்லாதிருந்தும் அவருக்குப் போக வேண்டிய பதவி என் தலையில் விழுந்தது. அன்று அது அவர் தலையில் விழுந்திருந்தால் இப்போது நான் இருக்கும் நிலையில் (சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகவும் இந்த நியமனக்குழு உறுப்பினராகவும்) அவர் இருப்பார். இப்போது இந்த இருவர் தகுதிகளையும் ஒப்பிடுங்கால் சம்பந்தா சம்பந்தமே இல்லை. டாக்டர் ரெட்டியார் எங்கே? டாக்டர் தாமோதரன் எங்கே? உழைப்பிலாவது ஒப்பீடு உண்டா? இல்லவே இல்லை என்பது தெளிவு. டாக்டர் ரெட்டியாரின் நூல்களே அவர்க்குப் பரிந்துரைகளாக இருக்கும். ஆதலால் இப்பதவி டாக்டர் ரெட்டியாருக்குக்தான் போக வேண்டும்’ என்று உருக்கமாக வாதித்து என்னை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்திலும் கையெழுத்திட்டாராம். ஏனையோரும் ஒப்புக் கொண்டனராம். இந்தச் செய்தியை ஒர் ஊர்க்குருவி என் காதோடு காதாகச் செப்பியது ஆயினும் எனக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் இச் செய்தி கிடைத்தது. டாக்டர் தாமோதரனுக்கு இச்செய்தி குழுவின் கூட்டம் கலைந்ததும் ஒர் ஊர்க் குருவி மூலம் உடனே இச் செய்தி கிடைத்ததாம், டாக்டர் சஞ்சீவியையோ டாக்டர் முத்து. சண்முகத்தையோ வழியனுப்ப இருப்பூர்த்தி நிலைத்துக்கு நான் செல்லவில்லை. இங்ஙனமே அவர்களை வரவேற்கவும் செல்லவில்லை. பின்னர் அவர்கள் தங்கி யிருந்த இடத்திற்கும் சென்று அவர்களை நான் பார்க்கவும் இல்லை. முதலில் இது நாகரிகம் இல்லை; அடுத்து அவர் களை இக்கட்டான நிலைக்கும் ஆளாக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் டாக்டர் தாமோதரன் இருப்பூர்தி நிலையத்தில் பலர் இருந்தும் அவர்களைப் பொருட்படுத்தாமல்" என்ன சார். எனக்கும் ரெட்டியாருக் கும் ஏணி வைத்தாலும் எட்டாது; அவர் மிக உயரத்தி லிருக்கிறார் என்று சொன்னீர்களாமே' என்று