பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வேமனர் உதயமும் என்பதவி உயர்வும் 667 கேட்டாராம். அதற்கு டாக்டர் சஞ்சீவியும், உண்மை யைத் தான் சொன்னேன்; உங்கள் நெஞ்சில் நீங்களே கையை வைத்துப் பாருங்கள்’’ என்று சொன்னாராம் இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எல்லா -ஊர்க் குருவிகளும் என்னிடம் வந்து கரைந்தன. இதில் மூடி. மறைக்க வேண்டியது ஒன்று மில்லாமையால். இன்னும் டாக்டர் தாமோதரன் என்னென்ன கேடு நினைக்கின்றாரோ, செய்யப் போகின்றாரோ என்று என் மனம் நினைத்ததில் வியப்பொன்றும் இல்லை. ஆந்திரத் தில் திரு என். டி. இராமாராவை எதிர்த்துத் திரு என்" பாஸ்கரராவ் (13-9-84) செயற்பட்டதுபோல் அன்று எனக்கு எதிராகச் செயற்பட்டார் திரு. தாமோதரன்; திரைமறைவில் செயற்பட்டார். நாயுடுமார்களின் கூட்டம் இதற்கு உறுதுணையாக இருந்தது. 'சாதி வெறி சமய வெறி இல்லாத என்னை இப்படி ஏன் துன்புறுத்து கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை. துணைவேந்தர் கம்மா நாயுடுவாக இருந்தும் அவர் செய்த செயலுக்கு எதிராக இப்படி ஏன் நாயுடுமார்களே எதிரம்பு கோத்து நிற்கின்றார்கள் என்பதையும் என்னால் ஊகிக்க முடிய வில்லை. நானும் சாதாரண மனிதனாக இருப்பதால் என் மனம் கோபதாபங்கட்கு அப்போது உட்பட்டிருந்தது. ஆட்சிக் குழுவில் ஒன்றிரண்டு ரெட்டிப் பிரமுகர் களிலிருந்தும், உள்ளுரிலும் ஒரிரு ரெட்டிப் பெரியார் களிருந்தும் அவர்கள் உதவியை நாடவில்லை. காரணம் நான் சாதி வெறியினால் எந்தப் பெரியார்களிடமும் பழக வில்லை. இப்போதும் அவர்களை நாட என் மனம் ஒருப்பட வில்லை. ஆனால் மனம் மட்டிலும் பல்வேறு விதமாகக் குமுறிக் கொண்டிருந்தது. இப்போதைய மனநிலை அன்றில்லை என்பது வெள்ளிடை மலை. பன்னிரண்டு ஆண்டுகள் ஓடி விட்டனி. மனமும் தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. மனம் இரு