பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608 நினைவுக் குமிழிகள். தி: வினை யொப்பைச் சிந்திக்கின்றது; அதில் ஆழங்கால் படு: கின்றது. முப்பதுசென் றால்விடியும் முப்பதுஞ்சென் றாலிருளும் அப்படியே ஏதும் அறிநெஞ்சே-எப்பொழுதும் ஆங்காலம் எவ்வினையும் ஆகும் அது தொலைந்து போங்காலம் எவ்வினையும் போம்.” என்ற குருஞான சம்பந்தரின் பொன் மொழியை எண்ணு. கின்றது. நல்வினைகளும் தீவினைகளும் தத்தம் கால எல்லையில் மாறிமாறி வருதலல்வது அவற்றை ஏய்து வோரது விருப்பத்தின் வழி வருதலும் போதலும் இல்லை’ என்ற உண்மையை இப்போது தெளிகின்றேன். எல்லாம் சிவன் செயலே' என்ற உண்மையும் மனத்திற்குத் தட்டுப் படுகின்றது. வவ்விப் பொருகுவதும் புழுங்குவதும் வேண்டா: வருகுவதுந் தானே வரும்' என்ற உண்மை யிலும் மனம் தோய்ந்து விடுகின்றது. 8. சிவபோக சாரம்- 79 3. டிெ-78