பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 10 நினைவுக் குமிழிகள்.4 து. வே. சொன்னார்: டாக்டர் ரெட்டியார், நீங்கள் பேராசிரியராக ஒய்வு பெறவேண்டும் என நினைத்து முயன்றேன். அதற்கு இப்படி ஒரு தடை ஏற்பட்டுவிட்டது. சுயநலம் என்று வந்து விட்டால் மனிதர்கள் கீழான நிலைக்கு இறங்கிவிடுகின்றனர். பண்பாடு, நாகரிகம் முதலிய அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றனர். இப்பொழுது ஒன்றும் மிஞ்சிப் போய்விடவில்லை. என்றார். நான்: வாழ்க்கையில் நான் கசப்பையே சந்திக் கின்றவன் Better என்று நினைத்து முயல்கின்றவை எல்லாம் Bitter ஆகப் போகின்றது. என் பிராரத்தம் (நுகர்வினை) இப்படி என்னை ஆட்டுகின்றது. ஏழுமலையான்தான் காப்பாற்ற வேண்டும். பிராரத்த மாக இருந்தால் அவனாலும் காப்பாற்ற முடியாது. ஆகாமியமாக இருந்தால் துடைத்து விடுவான்' என்றேன். அவர்: "நான் தங்களை வெறும் இலக்கிய அறிஞர் என்றுதான் நினைத்தேன். தத்துவ அறிஞராகவும் இருக்கின்றீர்கள். தத்துவத்தை ஏட்டுச் சுரைக்காயாக்கா மல் கறிக்கு உதவச் செய்கின்றீர்கள். ஒருவகையில் இந்த மனப்பான்மை மிகவும் நல்லது . ஆண்டவன் காப்பாற்றுவான்' என்றார், மேலும் தொடர்ந்து ... என் மனத்திற்கு இரண்டு வழிகள் தென்படுகின்றன. ஒன்று: "பத்தாண்டு அநுபவம்' என்பதை ஐந்தாண்டு: என்று குறைத்தும் தரமான வெளியீடுகள்' என்று சேர்த்தும் விளம்பரம் செய்யலாம் என நினைக்கின்றேன். இவ்வாறு செய்யட்டுமா?’’ இரண்டு: நிதிக்குழு (Finance committee) என்ற ஒன்றை ஆட்சிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு ஏற்படுத்தி பிரச்சினைகளைத் தீர்வுக்கு அதன் முன் வைக்கட்டுமா?' என்று வினவினார்.