பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/645

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதவி உயர்வு ஆணைபெறுவதில் தடை... Ꮾ Ꭵ I கான்: 'விளம்பரம் செய்தால் அது காலதாமதத்தில் கொண்டு செலுத்தும். நான் ஒய்வுபெற இன்னும் ஒராண்டு தான் உள்ளது. நான் பேராசிரியராக்க கூடாது என்று நினைப்பவர்களின் கருத்துக்குச் சாதகமாக அமைந்து விடும். பிரச்சினை யை குழுவின் முன் வைத்தால் விரை வில் காரியம் முடியும். பல்கலைக் கழகத்திற்கு ஏற்படும் பயணப்படி முதலிய செல்வுகளையும் தவிர்க்கலாம்" என்றேன். - து. வே: நீங்கள் பொருளாதார நிபுணர் போலவும் தோன்றுகின்றீர்கள், சரி, குழுவிற்கே முடிவுக்கு விட்டு விடுவோம். நெல்லூர் சென்று திரு. ஆனம்சஞ்சீவ ரெட்டியைச் சந்தித்து வாருங்கள். அவருடைய உதவி வேண்டும் என்று மட்டிலும் கேட்டு வாருங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்ளுகின்றேன்' என்றார். நான்: "அவரை எனக்குத் தெரியாது. முதல்முறை அவரைப் பார்க்கும்போது என்னை முதலில் அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டும். நானே என்னைப் பற்றி இந்திரன் சந்திரன்' என்றெல்லாம் சொல்லிக் கொள்ள வேண்டும். இது எனக்கு நாணமான செயலாகத் தோன்று கின்றது' என்றேன். து. வே. நீங்கள் ஒன்றுமே சொல்லிக்கொள்ள வேண்டாம். நியமனத்தில் தங்கள் உதவி தேவை. துணைவேந்தரும் உங்களைச் சந்தித்துப் பேசிவரச் சொன்னார்' என்று மட்டிலும் சொல்லி வாருங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்ளுக்கின்றேன்' என்றார். என் மனம் வேகமாகச் சிந்திக்கத் தொடங்கியது. இந்தக் குழுவில் திரு. சி. அண்ணாராவ், திரு. ஆனம் சஞ்சீவரெட்டி இருப்பார்கள் என்றும் நினைத்தேன், திரு. சி. அண்ணராவ் இந்நிலைமை உருவானதற்குக் காரணம் என்றும், அவர் டாக்டர் தாமோதரனைத்