பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/646

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61.2 நினைவுக் குமிழிகள் - தாங்கி நின்றால் என்னைத் திரு ஆனம்சஞ்சீவரெட்டி தாங்கட்டும் என நினைக்கின்றார் போலும் என் பொருட்டுத் துணைவேந்தர் கண்ணனாக நின்று. என்னுடைய எதிர் சக்திகளை முறியடிக்க நினைக்கின்றார். போலும் என்று என்மனம் கருதத் தொடங்கியது. நெல்லூர் சென்று வருவதற்கு ஒப்புக் கொண்டேன். 'போய் வாருங்கள். எல்லாம் வெற்றியாக முடியும் . என்று விடைகொடுத்தனுப்பிவிட்டார். அக்டோபர் திங்கள் இறுதியில் ஒருநாள் காலையில், நெல்லூர் சென்றேன். திரு. ஆனம்சஞ்சீவ ரெட்டி காப்பு வீதியில் இருப்பதாகக் கேள்வியுற்று அவர் இல்லத்திற்கு ஆள் மிதிவண்டியில் சென்று அவரைச் சந்தித்தேன். காப்பு வீதி பெரிய பெரிய பிரபுக்களின் மாளிகை நிறைந்த இடம். எல்லோருமே சுகவாசிகள். பெயரட்டையை ஆள்மூலம் அனுப்பி காத்திருக்கும் அறையிலிருந்தேன். கட்டளை வந்ததும் வரவேற்கும் அறையில் சென்று பேசினேன். பிரச்சினையை எடுத்து விளக்கினேன். எல்லாம் தெரியும். வெற்றியாக முடிப்பேன்' என்று உறுதி கூறினார். அவருடைய பேச்சுத் தொனியில் திரு. சி. அண்ணாராவின் திருவிளையாடலை அறிந்து கொள்ள முடிந்தது. பிறகு, அவரிடம் விடைபெற்று ஊர் திரும்பினேன். நிதிக்குழு கூட்டம் திசம்பர் 17-ஆம் நாள் (1976). நடைபெறுவதாக நாள் குறிப்பிடப் பெற்றிருந்தது. திசம்பர் திங்கள் தொடக்கத்தில் ஆந்திரத்தில் ஏற்பட்ட புயல் அந்த மாநிலத்தை நிலைகுலைய வைத்துவிட்டது. சுமார் இருபத்தைந்து நாட்கள் பிற இடங்களுக்கு, நெல்லூர்த் தொடர்பே அற்றுப்போய் விட்டது. நெல்லூர் வழியாக ஒடும் இருப்பூர்திகளும் நின்றன; சாலைகள் பல இடங்களில் துண்டுபட்டதால் பேருந்துகள் ஒட. வில்லை, தந்திக் கம்பிகள், தொலைபேசிக் கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தன: கம்பிகள் அறுபட்டுப் போயின.