பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/647

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதவி உயர்வு.ஆணை பெறுவதில் தடை... 6 : 3 இதனால் செய்தித் தொடர்பும் இல்லாதொழிந்தது, திசம்பர் இருபத்தைந்து தேதி வரையிலும் எல்லாம் சீர்படுவதாகத் தெரியவில்லை. திசம்பர் 17-தேதி நடை பெறும் கூட்டத்திற்குத் திரு. ஆனம்சஞ்சீவரெட்டி எப்படி வரமுடியும்? திரு. ரெட்டி வந்தாலும் வராவிட்டாலும் கூட்டம் நடைபெற்றுவிடும். ஏனெனில் திரு அண்ணாராவ் திருப்பதியிலிருப்பவர். துணைவேந்தரும் திருப்பதியில். தான் உள்ளார். இருவரைக் கொண்டு கூட்டம் நடை பெறலாம். இதில் தலைபோகிற காரியம் ஒன்றுமில்லை; திரு. C, அண்ணாராவ்" வாயடி கையடி’ அடித்துத் தம் முடைய சாணக்கியத்தால் பேராசிரியர் பதவி எனக்குக் கிட்டாது செய்து விட முடியும். துணைவேந்தரோ மிகவும் சாதுவானவர். கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்றி வைக்கவும் அவருக்குத் துணிவு இராது. மாற்றி வைத்துக் கொண்ட தகவல் நெல்லூருக்கு எட்டவும் வழியே இல்லை; கூட்டத்தில் அடித்துப் பேசவும் துணிவு இராது. ஆதலால் எனக்குப் பதவி வராது என்று உறுதி கொண்டு விட்டேன். ஏழுமலையானின் கண் திறந்தது. கரியவாகிப் புடை பாந்து செவ்வரியோடிய கண்ணின் வழியாக கருணை வெள்ளம் கரைபுரண்டோடத் தொடங்கியது. வெள்ளத்தால் சேதப்பட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்க்க மாண்புமிகு ஆந்திர முதல்வர் ஜலகம் வெங்கல் ராவ் டிசம்பர் 16ஆம் நாள் ஹெலிகாப்டரில் நெல்லூர் வந்தார்; சுற்றிப் பார்த்தார். இவர் வரும்போதெல்லாம் திரு. ஆனம்சஞ்சீவ ரெட்டியின் இல்லத்தில்தான் தங்குவாராம், ஐதரபாத் செல்லும்வரை ஹெலிகாப்டரில் ஆற்றல்மிகு பெட்ரோல் (High Power petrol) இல்லாது போய்விட்டது. நெல்லூரில் அந்த எண்ணெய் இல்லை. 17-ஆம் தேதியன்று ரேணிகுண்டா அல்லது கடப்பையில் இருக்குமென்று கருதி அவ்விடங்களுக்குப் போகத் திட்டமிட்டார் முதல்வர். திருஆனம் அவர்கள் உடனே 'எனக்கு இன்று