பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/648

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6星盘 நினைவுக் குமிழிகள்-4 திருப்பதியில் ஒரு கூட்டம் உள்ளது. நானும் உங்கள் ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா வரையில் வருகிறேன்: ' என்று சொல்லிப் பிற்பகல் இரண்டு மணியளவில் ரேணி குண்டா வந்து சேர்ந்தார். தொலைபேசி மூலம் துணைவேந்தரிடம் தொடர்பு .ெ கா ண் டு நான் ரேணிகுண்டா வானவூர்தி நிலையத்துக்கு வந்துவிட்டேன். வண்டி அனுப்புங்கள். கூட்டத்தை ஒரு மணி நேரம் தள்ளி வையுங்கள்' என்று சொல்லி விட்டார். அப்படியே வண்டி வந்தது. மூன்று மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணை அனுப்பப் பெறாது இருந்த நால்வருக்கும் ஆணை பிறந்தது. டிசம்பர் 25 நாள் முதல் ஜனவரி (1977) 17 தேதி வரை கிறித்துமஸ் விடுமுறை. அதனால் நடைமுறை விதிப்படி சனவரி 17-ஆம் நாள்தான் பேராசிரியராகப் பதவியேற்றேன். புதிதாக வெளியிலிருந்து சேர்பவருக்கு இந்த விதி பொருந்தும் என்று கருதலாம். ஆனால் துறையில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றுபவருக்கு, அதுவும் விடுமுறையிலும் தொடர்ந்து அலுவலக வந்து கடிதங்கள் முதலியவற்றைப் பார்த்து மறுமொழி எழுதுபவருக்கு இந்த விதி பொருந்து மாறில்லை என்பதை ஆட்சியாளர் சிந்திப்பதே இல்லை. நடைமுறைக்கு ஒவ்வாத இந்த விதி மாற்றப் பெறவேண்டும். ஆட்சிப் பொறுப்பி லிருப்பவர்கள் இதைக் கவனிப்பார்களா? மேற் குறிப்பிட்ட நால்வருக்கும் (என்னையும் சேர்த்து) ஊழ் இருந்ததால் பதவி உயர்வு கிடைத்தது. எதிர்த்துச் சாணக்கியம் செய்தவர்கள் ஏமாந்தனர். "திக்கற்றவருக்கு தெய்வமே துணை' என்ற முதுமொழி பொய்யா மொழியாக ஒளிர்ந்தது. திரை மறைவில் அன்று நடைபெற்ற நாடகம் இன்று இந்தக் குமிழியில் ஒலிபரப்பப் பெறுகின்றது. ஒவ்வொருவருக்கும் தத்தம் வாழ்க்கையில் எத்தனையோ இக்கட்டுகள் நிகழலாம்; இடர்ப்பாடுகள் நேரிடலாம். தெய்வத்தின்மேல் நம்பிக்கை வைத்துப் பொறுமையாக இருப்பது நல்லது. இந்த வேதாந்தம்'